பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாமீம் பிஸ்மில்லாஹறி பாட்டுடைத் தலைவர் வரலாறு நாடு போற்றும் வள்ளல்கள் ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. என்றார் பொய்யா மொழிப் புலவர். செல்வத்துப் பயன் ஈதலே என்பதனை ஒதியுணர்ந்துள்ளமையால், வீரம் செறிந்த தமிழ்ப் பெருமக்கள் ஈரப் பண்பிலும் இணையற்றுத் திகழ்ந்து வந்துள்ளனர். பண்டைய வள்ளல் பெரு மக்களின் கொடை மடம் பட்ட அருட்செயல்கள் சிலவற்றிலே, பிற்காலத்தில் தமிழ் மக்கள் உருவாக்கியதும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் தாமும் வாடிய திருவருட் பிரகாச வள்ளல் பெருமானால் ஏற்றம் பெற்றதுமான அருளறக் கொள்கையின் கருமுதலை நாம் காணுகின்றோம். பண்டைத் தமிழினம் இவ்வுலகினுக்கு வழங்கிய நன்கொடையாம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் சிறப்பு மிகு கொள்கை இத்தகைய அருள் உணர்வின் பரிணாம வளர்ச்சியாகவே தோன்றுகிறது. எனவே முன்னைய தமிழர் தம் கொடைத் திறத்தில் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை அமைந்திருக்கிறது எனலாம். "பேகனும் பாரியும் காரியும் ஆயும் அதிகனும் நள்ளியும் ஒரியும் என எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகத்தை நல்லியக் கோடன் ஒருவனே தாங்கினான்' - விந்தியம் குமரியிடை விளங்கும் தென்னகத்தின் முடியுடை முப்பெரும் வேந்தர்களும், அவர்தம் ஆட்சியாண்டுகளின் இறுதிப் பகுதியில் வாழ்ந்திருந்த குறுநில மன்னர்களான கடையெழு வள்ளல்களும் மறைந்ததன் பின்னர், இரவலர்களையும், புலவர்களையும் போற்றி ஆதரிக்கும் பொறுப்பினை ஒய்மானாட்டின் சிற்றரசன் நல்லியக் கோடனே ஏற்றுக் கொண்டான் எனவும், "தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ் நனை மறுகின் மதுரையும் * * சிறுபாணாற்றுப்படை : 41 - 42 3