பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாசைக்கோவை திருமயிலைத் திருக்குளத்தின் தென்கரையிலுள்ளதும், இப்பொழுது சித்திரச் சத்திரமென்று வழங்கப்பெறுவதுமாகிய சத்திரத்தைக் கட்டுவித்து அதற்குப் பலவகையான வருவாய்களையும் ஏற்படுத்தி புகழ்பெற்று விளங்கியவர் வியாசர் பாடி விநாயக முதலியார். அவர் மீது மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடியது வியாசைக் கோவை ஆகும். இக்கோவையின் முதல் நூறு பாடல்களுக்குப் பின் மீதியுள்ள 300 பாடல்களையும் அவரது மாணவரும் கும்பகோணம் அரசினர் கல்லூரி ஆசிரியருமான சி. தியாகராச செட்டியார் (1826 - 1888) பாடியது என்று உ.வே. சாமிநாதையர் தெரிவித்துள்ளார். ’ சீகாழிக்கோவை பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயர் இயற்றிய சீகாழிக் கோவை பற்றி முன்னரே தெரிவித்துள்ளோம். 19 ஆம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் பூரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர் களால் பாடப்பட்டது சீகாழிக் கோவை ஆகும். பூரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு எனும் ஆயிரம் பக்கங்களை நெருங்குகிற அந்த நூலில் 271 வது பக்கத்தில் பாடல் எண் 1152 என்ற எண்ணில் துவங்கி, 354 பக்கத்தில் 1704 என்ற எண்ணில் நிறைவடையும் வண்ணம் சீகாழிக் கோவை நூல் வெளிவந்துள்ளது. கி.பி. 1875 இல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலமானார். இரண்டு கோவைகளை முழுமையாகவும், ஒரு கோவையில் நூறு பாடல்களையும் பாடிய இவர் தமிழ் இலக்கிய உலகில் என்றும் நிலைத்து வாழ்பவராவார். திருச்செந்தூர்க் கோவை வண்ணச் சரபம் திருப்புகழ் சுவாமி, தண்டபாணி சுவாமி எனவும் அழைக்கப்படும் முருகதாச சுவாமிகள் (1840 - 1899) திருநெல்வேலியில் வேளாண்குடியிற் பிறந்தவர். பல நூற்களை இயற்றியுள்ள இவரால் பாடப் பெற்றது 'திருச்செந்தூர்க் கோவை ஆகும். மருங்காபுரிக் கோவை பாண்டிய நாட்டில் கொடுங்குன்றம் என்ற ஊரில் பிறந்த வெறிமங்கை பாகக் கவிராயர் மருங்காபுரி சிற்றரசராற் போற்றப்பட்டவர். தம்மை ஆதரித்த மருங்கரபுரி சிற்றரசர் மீது குறவஞ்சி, உலா முதலியன இயற்றியதோடு நில்லாமல் மருங்காபுரிக் கோவையும் பாடியுள்ளார். 35 மேலது பக். 161. 46