பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடீச்சுரக் கோவை கொட்டையூர் சிவக்கொழுந்து பண்டாரம் என்றும் அழைக்கப்படும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கி.பி. 1889 இல் இயற்றியது கோடிச்சுரக் கோவை ஆகும். பேருர்க் கோவை கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில் ஒன்றாகிய ஆறை நாட்டின்உட்பிரிவான் பேரூரில் கோயில் கொண்டிருக்கும் பட்டீசப் பெருமான் மீது பாடப் பெற்றது 'திருப்பேரூர் பட்டீசர்க் கோவை ஆகும். - - கோவைக்குத் தெற்கே 16 கி.மீ. தூரத்திலிருக்கிற ஒராட்டுக் குப்பைச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த முத்து நயினாத்தை முதலியார் என்பவர் பாடியது இந்த நூலாகும். ” இதில் 360 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த நூல் 55 பக்கங்களைக் கொண்டு அச்சாகியுள்ளது. தாண்டவராயப் பிள்ளை கோவை சர்க்கரைப்புலவர்ல் பாடப்பட்டது. தாண்டவராயப் பிள்ளைக் கோவை என்பர் முனைவர் ந.வீ. செய ராமன். ” அலங்காரக் கோவை திரிசிரபுரம் கோவிந்தசாமி பிள்ளையால் பாடப்பெற்றது அலங்காரக் கோவையாகும். - ஐந்திணைக் கோவை கொட்டாம்பட்டியில் 1844 இல் பிறந்தவர் கருப்பையா பாவலர். இவர் பாடியது ஐந்திணைக் கோவை ஆகும். ஐந்திணை நெறி யளாவுதலின் ஐந்திணைக் கோவை யெனவும் இவ்வகை நூல் பெயர் பெறும் என்பர் உ.வே.சாமிநாதையர். - சிராமலைக் கோவை தட்சிணகைலாய மென்னும் சிறப்புடைய திருச்சிராப்பள்ளியிலுள்ள மலையிற் கோயில் கொண்டெழுந் தருளியுள்ள தாயான செல்வரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப் பெற்றது சிராமலைக் கோவை. இதனைப் பாடியவர் பெயர் அறியப் படவில்லை. இது சிரகிரிக் கோவை என்றும் வழங்கப்படும். இந்நூலின் ஏட்டுப்பிரதி திருநெல்வேலி சாலி வாடீசுவர ஒதுவாரவர்கள் வீட்டிலிருந்து உ.வே. சாமிநாதையருக்கு கிடைத்தது. இதனை செந்தமிழ்ப் பத்திரிகையில் அவர் வெளியிட்டார். 36 பேரூர்க்கோவை, கோவை சி.எம். ராமச்சந்திரன் செட்டியாரின் முன்னுரையுடன், சென்னை, 1955, முகவுரை பக், xy, xvi. 37 சிற்றிலக்கியச்செல்வங்கள், பக்.193. 47