பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்துவான் வி.மு. சுப் பிரமணிய ஐயரும், சிரஞ்சீவி வித்துவான் கி.வா. ஜகந்நாதையர், மு. நடேச முதலியார் ஆகியோர் உதவியுடன் 1937இல் உ.வே. சாமிநாதையர் 1937 இல் உ.வே. சாமிநாதையர் 140 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளியிட்டார். இக் கோவை 458 செய்யுட்களை உடையது. " - நல்லூர்க் கந்தசாமிக் கோவை யாழ்ப்பாணத்தில் கரணவாயென்ற ஊரில் சைவகுருக்கள் மரபிற் பிறந்தவர் செவ்வந்திநாத தேசிகர் (1907 - 1932) வித்துவான் சி. கணேசை யரிடம் கல்விபயின்ற இவர் இயற்றியது நல்லூர்க்கந்தசாமிக்கோவை ஆகும். ஆனந்தரங்கன் கோவை கி.பி. 1709 மார்ச் 30 இல் சென்னை பிரம்பூரில் யாதவ குலத்தில் திருவேங்கடம்பிள்ளை என்பவரது புதல்வராகப் பிறந்தவர் ஆனந்தரங்கன் பிள்ளை. வரலாற்றுப் புகழ்பெற்ற துபாஷி (பலமொழி வல்லவர்) யாகப் பணியாற்றிய இவர் மீது திருவாரூரைச் சேர்ந்த தியாகராய தேசிகர் (இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியந்ாத தேசிகரது குமாரர்) என்பவரால் கி.பி. 1739 இல் பாடத் தொடங்கி, 1755 இல் நிறைவு செய்யப் பட்ட 400 செய்யுட்களைக் கொண்டது ஆனந்தரங்கன் கோவை ஆகும். சிலர் (இதனை இயற்றியது சதாசிவ தேசிகர் என்றும் கூறுவர்). இந்தக் கோவை நூலுக்கு கடலூர் ந. பலராம ஐயர் (1876 - 1943) உரை இயற்றியுள்ளார். 1920 இல் இந்தப்பணி நிறைவடைந்தும், அப்போது நூல் வெளிவரவில்லை. அதன் பின் 1935 களில் சி.எம். இராமச்சந்திரன் செட்டியாரவர்களின் கொங்கு மலரில் நூறு பாடல்கள் வரை வெளிவந்துள்ளது. பின்னர் கால இடை வெளிக்குப் பின் 1955 இல் வித்து வான் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் அவர்களின் முகவுரையோடு, அரசாங்க உதவியோடு இந்த நூல் 151 பக்கங்களில் வெளிவந்துள்ளது. மதுரைச்சொக்கநாதர் வருக்கக்கோவ்ை திருநெல்வேலியில்சுப்பிரமணியபிள்ளையின்மகனாகப் பிறந்தநல்ல சிவன் பிள்ளை (1882 - 1952) இயற்றிய நூல் மதுரைச் சொக்கநாதர் வருக்கக் கோவை. நீல கண்டேச்சுரக் கோவை திருத்துறைப் பூண்டிக்கு அருகில் உள்ள பின்னத்தூரைச் சேர்ந்தவர் தாராயண சாமி ஐயர் (1862 - 1914) நற்றிணைக்கு உரை எழுதியுள்ள இவர் இயற்றியது நீல கண்டேச்சுரக் கோவை. 38 சிராமலைக் கோவை, உ.வே. சாமிநாதையர் பதிப்பு, மதுரை, 1937, 39 ஆனந்தரங்கன் கோவை, சென்னை 1955. 48