பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரதைக் கோவை நீல கண்டேச்சுரக் கோவை இயற்றிய பின்னத்துர் நாராயணசாமி ஐயர் சிவபுராணம், சிவகீதை போன்ற பல நூற்களை இயற்றியுள்ளார். அவர் பாடிய மற்றொரு கோவை அரதைக் கோவை ஆகும். மதுரைக் கோவை - 1934 இல் எஸ். வையாபுரிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது மதுரைக் கோவை. இதனை இயற்றியவர் வேம்பத்துார் ( வேப்பற்றுார், நிம்பை, குலசேகரச் சதுர்வேதி மங்கலம்) சங்கர நாராயணர் ஆவார். மதுரையில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சொக்கேசப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது; திருவிளையாடற்புராண சரிதங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது; 403 பாடல்களையுடையது. பரங்கிரிக் கோவை 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்தவர் மு. ரா. அருணாசலக்கவிராயர். சேற்றுார் ஜமீனில் வாழ்ந்த இராமசாமிக் கவிராயரின் மகனாகப் பிறந்த இவர் தமிழ் இலக்கிய உலகிற்கு அருந் தொண்டாற்றியுள்ளார். இவர் பாடியது பரங்கிரிக் கோவை ஆகும். இன்னபிற கோவைகள் அம்பிகாபதி இயற்றிய நெல்லை வருக்கக் கோவை, காவு பால சித்தரின் காவுபால சித்தர் ஆணிக் கோவை, குமரசேனாசிரியரின் குமர சேனாசிரியர் கோவை, சட்டை முனியின், சடாட்சரக் கோவை, தாண்டவராயரின், திருமயிலைக் கோவை, தமிழ்க்கோவை, வங்கர் கோவை, நந்திக் கோவை, தானக் கோவை, காரிக் கோவை, இராமீகரக் கோவை, அண்ணாமலைக் கோவை, அண்மையில் வெளிவந்த நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த கவிஞர் வெண்பா வேந்தன் அவர்களின் வெண்பாக்கோவை ஆகிய கோவைகளும் தமிழில் பாடப் பட்டுள்ள செய்திகளை அறிகிறோம். அடியேனின் சிற்றறிவிற்கு எட்டாமல், காலகதியில் வெளிவராமல் மறைந்துபோன ஒரு சில கோவைகளும் இருக்கக்கூடும். மும்மணிக்கோவை தம்முன் நிறங்கள் வேறுபட்ட புருடராகம், வைடுரியம், கோமேதகம் என்னும் மூவகை மணிகளாற் கோக்கப்பெற்ற கோவையைப் போலவே, தம்முன் வேறுபட்ட ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைச் செய்யுட்கள் முப்பதால் கோக்கப் பெற்ற பாமலை மும்மணிக்கோவை. 49