பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீமத் குமரகுருபர சுவாமிகள் நடராசப் பெருமான் மீது அருளிச் செய்த 'சிதம்பரச் செய்யுட்கோவை, தருமபுரம் மாசிலாமணி தேசிகர் மீது பாடிய பண்டார மும்மணிக் கோவை பிரசித்தி பெற்றவை. " கோயமுத்துரர் கந்தசாமி முதலியாரின் பேரூர் மும்மணிக் கோவை (1832), கனக சபை நாயகரின் சடாரணியம் சுப்பிரமணிய சுவாமியார் மும்மணிக் கோவை'(1881), மாயூரம் கிருஷ்ணானந்த யோகிகளின் ஞான சித்தமும் மணிக் கோவை(1896), கல்லிடைக்குறிச்சி சிதம்பரநாதக் கவிராயரின் திருநெல்லை மும்மணிக்கோவை (1867), சொக்கலிங்க சிவப் பிரகாச பண்டார சந்நிதியின் குமார தேவசுவாமிகள் மும்மணிக் கோவை (1883), காயாறு ஞானகந்தரையரின் மயிலாசலம் பூர் சிவஞான சுவாமிகள் மும்மணிக் கோவை(1879), தத்துவராய சுவாமிகளின் மும்மணிக் கோவை (1869), தெ.சி. துரைசாமிப் பிள்ளையின் திருப்புன்கூர் மும்மணிக் கோவை (1895), பால சுப்பிரமணிய ஐயரின் கொப்புடைநாயகி மும்மணிக் கோவை (1895), க. வேலுசாமி பிள்ளையின் சிதம்பரம் கற்பக விநாயகர் மும்மணிக் கோவை (1885) ' போன்ற பல மும்மணிக் கோவைகளின் விவரங்களை அறியமுடிகிறது. உ.வே. சாமிநாதையர் 1932 இல் மதுரை மும்மணிக் கோவையையும், 1934 இல் வலிவல மும்மணிக் கோவையையும் மறுபதிப்புச் செய்துள்ளார். இஸ்லாமியக் கோவை இலக்கியங்கள் பக்தி மார்க்கம் என்ற நிலையில் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளுடனும் தொடர்புடைய நூல்களை இயற்றி தமிழுக்குப் புகழ் சேர்த்த முஸ்லிம் புலவர்கள், அகப் பொருள் சுவையுடைய கோவை இலக்கிய வடிவத்திலும் சில படைப்புகளைத் தந்துள்ளனர். அகப் பொருட் சுவையுடைய கோவை இலக்கியங்கள், இஸ்லாமிய நெறிகளுக்கு உட்பட்டு படைக்கும் முயற்சியில் 'கோவை' இயற்றிய ஆசிரியர்கள் கத்தி மேல் நிற்பது போன்ற நிலையில் நின்று, மரபுக் குட்பட்டும் தாம் பின்பற்றும் இஸ்லாமிய நெறிக்கும், பாட்டுடைத் தலைவருக்கும் களங்கம் ஏற்படாவண்ணம் பாடல்களைப் பாடவேண்டிய நிலையில் இருந்தனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் நிலையில் 'பல்சந்தமாலை என்னும் இலக்கியம் உள்ளது; இது ஒரு கோவை நூலாக இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 40 பூரீமத் அருணந்தித் தம்பிரான் 1937 இல் பதிப்பித்த 36 பக்கங்களைக் கொண்ட நூல். 41 தமிழ் நூல் விவர அட்டவணை (1867 - 1900) முதல் தொகுதி, இரண்டாம் பகுதி, சென்னை, 1962, பக். 715 - 717, . 5O