பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிக்கோவை நாகூரில் வாப்புராவுத்தரின் புதல்வராகப் பிறந்த குலாம் காதிறு நாவலர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் 28 நூற்களை இயற்றியவர்; புலவர் ஆற்றுப்படை பாடி அதனை பாண்டித் துரைத் தேவர் தலைமையில் அரங்கேற்றியவர். அண்ணல் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் மீது இவர் பாடியது மும்மணிக்கோவை ஆகும். வெண்பா ஆசிரியப்பாவும், நேரிசையாய் இருக்கஅவற்றுடன் கலித்துறையும் இணைந்து வர முப்பது செய்யுட்களில் இதனைப் பாடியுள்ளார். பதானந்தக் கோவை திருச்சியைச் சேர்ந்த சித்திரக்கவி பாடுவதில் வல்லவரான சையது இமாம் புலவர் அவர்களால் 1915 இல் பாடப்பட்டது பதானந்தக் கோவை ஆகும். இறைவனின் இறுதித் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் விண்ணேற்றப் பயணத்தை (மிஃராஜ்) வருணித்துப் பாடும் இக்கோவையில் அகப் பொருட் செய்திகள் எதுவும் இடம் பெறவில்லை. - ஆசாரக் கோவை கீழக்கரையைச் சார்ந்த மு.அ.க. அப்துல் மஜீது பாடிய ஆசாரக் கோவை 1902 இல் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் ஒவ்வொரு பாடலின் அடியையும் 'முஹம்மது தம்பி மாமரைக்காய சகாயனே என்று தம்மை அரவணைத்த புரவலரை நினைவு கூறும் வண்ணம் பாடியுள்ளார். புரவலரின் குணநலச் சிறப்புக்களை உள்ளடக்கச் செய்திகளைக் கொண்டு மட்டும் இக் கோவை அமைந்துள்ளது. இதில் அகப்பொருட் செய்திகள் இல்லை. கொள்கை மணிக்கோவை 1955 ஆம் ஆண்டு மீ. உ. கான் முஹம்மது இஸ்லாமியக் கொள்கை விளக்கும் செய்யுட்களை கோர்வை செய்து எழுதி வெளியிட்டுள்ள கொள்கை மணிக் கோவையிலும் அகப் பொருட் செய்திகளைக் காண முடியவில்லை. முஹம்மது காசிம் பொன் மொழிக் கோவை வாழ்க்கை சிறப்படைய வழிமுறைகளை வழங்கும் செய்யுட்கள் அடங்கிய நூல்; முஹம்மது காசிம் என்னும் நல்லோரின் நெறிமுறைகள் பேசப் படுகின்றன. இதன் இறைநேசன் யாத் துள்ளார். இஸ்லாமியக் கருத்துக்கள் அடங்கிய மேற்சொன்ன 'கோவை என்னும் பெயரினைத் தலைப்பாகப் பெற்றிருக்கும் இந்த நூல்கள் அகப்பொருள் சார்ந்தனவாக இல்லை என்பதால் இவைகளை கோவை என்னும் சிற்றிலக்கியப் பிரிவின் பாற் சேர்த்திடல் இயலாது. மக்காக் கோவை அகப்பொருள்கோவைநூற்கள்மூன்றினை இஸ்லாமியத்தமிழ் பெற்றுள்ளது. நாகூர் தர்கா வித்துவான் செவத்தமரைக்காயர் பாடியது மக்காக் கோவை. 51