பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது கி.பி. 1890 இல் நாகப் பட்டினம் மகாராணி கைத்தொழில் பாடசாலை அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு, திருச்சி வெ. நாராயண சுவாமிப் பிள்ளையவர்களால் பார்வையிடப்பட்டு வெளி வந்த கோவை நூலாகும். 437 கலித்துறைச் செய்யுட்களும், நூலுக்குப் பொருள் உதவி செய்த நாகூர் தர்கா மேலாளர் சின்னமரைக்காயர் மாலுமியார் அவர்களை வாழ்த்திப் பன்னிரெண்டு செய்யுட்கள் வாழி என்னும் தலைப்பில் தனியாகவும் கொண்டது இக்கோவை. இஸ்லாமியரின் புண்ணியத்தலமான மக்கமா நகரினையும், இறுதித் தூதர் நாயகம் பெருமானார் (ஸல்) அவர்களையும் சிறப்பித்துப் பாடப் பெற்றது இக்கோவை ஆகும். அதிகமான அளவில் அரபுச் சொல்லாட்சி இதில் காணப்படுகிறது. விஜயன் அப்துல் ரகிமான் அகப்பொருள் பலதுறைக்கோவை கொலை, கொள்ளை, கொடுமை செய்து திரிந்த கொடியவன் ஒருவனை அடக்கிவென்றதால் விஜயன் அம்பலம் என்ற பட்டம் பெற்ற பரம்பரையில் வந்தவர் அப்துல் ரகுமான். இராமநாதபுரம் நத்தம் என்ற ஊரைச்சேர்ந்த இவர் மீது கி.பி. 1911 இல் சோதுகுடி எம்.கே.எம். அப்துல் காதிறுராவுத்தர் பாடியது "விஜயன் அப்துல் ரகுமான் அகப்பொருள் பலதுறைக் கோவை ஆகும். ஷம்சுத்தாசீன் கோவை நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் மாஜிஸ் டிரேட்டாகப் பதவி வகித்த, பிரபல வர்த்தகர், வெட்டுவாங்குளம் கிராம இனாம் தாருமான மேலப்பாளையம் கொடை வள்ளல் வ.செ.த. ஷம்சுத்தாசீன் அவர்கள் மீது சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அவர்களால் பாடப்பட்டது 'ஷம்சுத்தாசீன் கோவை ஆகும். நமது மாவட்டத்தில், நாம் குடியிருக்கும் பாளையங் கோட்டைக்கு அருகில் உள்ள மேலப்பாளையத்தில் வாழ்ந்த வ.செ.த. ஷம்சுத்தாசீன் மீது கோவை நூல் ஒன்று மகாமதி சதாவதானி செய்குதம்பிப் பாவலரால் பாடப் பட்டிருக்கிறது என்பதனை அறிந்தேன். இந்தக் கோவை நூலை எப்படியும் தேடிக் கண்டுபிடித்திட வேண்டும் என்று முயன்றேன். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தேன். கே.பி.எஸ். ஹமீது அண்மையில் பாளையங்கோட்டையில் மாநிலத் தமிழ்ச் சங்கம் சார்பில் பாவலர் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவிற்கு பாவலரின் புதல்வர் அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாஞ்சைமிகு அண்ணன் கே.பி.எஸ். ஹமீது அவர்களும் வந்திருந்தார்கள். விழாவில் உரையாற்றும் போது 'பாவலரின் நூற்கள் தேடி எடுத்துப் 52