பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பிக்கப்பட வேண்டும் என்று பேசினேன். அருகிலிருக்கும் மேலப்பாளையம் வ.செ.த. ஷம்சுத்தாசீன் மீது கோவை ஒன்று பாவலரால் பாடப்பட்டுள்ளது. அந்த நூல் கிடைத்தால் இறைவனின் அருளால் பதிப்பித்து விடலாம்', என்றும் கூறினேன். அருகிலிருந்த அண்ணன் கே.பி.எஸ். ஹமீது அவர்களும் அதற்கு முழுமனதுடன் ஒப்புதல் தந்தார்கள். சுசீந்திரம் சி. குமரேசபிள்ளை - பாவலரின் விழாவிற்கு பெருமைக்குரிய வித்துவான் சைவத் தென்றல் சி. குமரேசபிள்ளை அவர்களும் வந்திருந்தார்கள். என்னிடம் அந்த கோவை நூல் இருக்கிறது என்றார்கள். ஆண்டுகள் பல தேடித் திரிந்தும் அகப்படாத நூல் அதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைக்கப் போகிறது என்று மகிழ்ந்தேன். அவர்களிடம் தொடர்பு கொண்டேன். அவர்களே அடியேன் இல்லத்திற்கு வந்து அந்தக் கோவை நூலைத் தந்தார்கள். அவர்களுக்குப் பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். தமிழ் இலக்கியத்திற்கும், சைவத்திற்கும் சேவை செய்து வரும் அன்னாரின் அன்பையும், பண்பையும் எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இவர்கள் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்கள் வரலாற்றை செந்தமிழ் வளர்த்த செய்குதம்பி என்றும் நூலாக யாத்துள்ளார். - இந்நூலை இலவசமாக வெளியிட ஏற்கனவே எண்ணியிருந்த மேலப்பாளையம் WST ஷம்சுத்தாசீன் தரகனார் அறக்கட்டளை, ஹாமீம் பள்ளி மதரஸா குடும்ப அறக் கட்டளையினரிடம் தெரிவித்த போது உடனே அதனை நூலாக்கிட மனமுவந்து முன்வந்தனர். அவர்களுக்கு மென்மேலும் எல்லா வளங்களையும் இறைவன் அருள்வானாக! அன்னைத் தமிழுக்கு சேவையாகவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு, துணையாகவும் ஷம்சுத்தாசீன் கோவை நூல் அமைந்திடும் என்று எண்ணுகிறேன். தமிழில் போதிய பாண்டித்தியம் பெற்றிராத அடியேனது முயற்சியினைத் தொடர்ந்து, பாவலரின் அச்சில் வராத, மறுபதிப்புக் காணாத பலநூற்களும் அச்சிலேற தமிழ் ஆர்வலர்களும் புரவலர்களும் முயன்றிட வேண்டும்; - - இந்த முயற்சியால், தமிழ் இலக்கியமும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியமும் துளியேனும் செழித்து வளர உதவும் என்று நம்புகிறேன். இதுபோன்ற பல நூல்களை வெளிக் கொண்டுவர இறைவன் அருள்மழை பொழிவானாக! 63