பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அன்னைத் தமிழுக்கு அணிசெய்திட்ட பெரும்பணியில் சமயச் சழக்கில்லாமல், சைவமும், சமணமும், வைணவமும், இஸ்லாமும், கிறிஸ்தவமும், பெளத்தமும், ஒன்றையொன்று முந்தும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டன. மங்காச்சிறப்புடைய, மாறா இளமையுடைய முத்தமிழுக்குத் தொண்டாற்றிய முஸ்லிம் புலவர்கள் பலர். அதில் சரித்திரத்தில் மறைக்கப் பட்டவர்கள் சிலர், மறக்கடிக்கப் பட்டவர்கள் சிலர். சாகா சரித்திரத்தில், வாழும் வரலாற்றில் கால வெள்ளத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்ப வர்கள் சிலர். வளரும் தலைமுறையினரால் எண்ணிப் பார்க்கப்படுபவர் சிலர். அவ்வாறு எண்ணிப் பார்க்கப்பட்டு, எந்நாளும் போற்றப்பட வேண்டியவர் சதாவதானி செய்கு தம்பிப்பாவலர் என்றால் அது மிகையாகாது. தனக்கென தன்னேரில்லாத் தனிச்சிறப்புப் பெற்ற அந்த மகாமதிப் புலவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்.... - பிறப்பு - சூஃபி ஞானி எனப் போற்றப்படும் சித்த வித்தகர் ஞானியார் அப்பாவின் பரம்பரையில், நாஞ்சில் நாட்டில், பண்டக சாலையும் சண்டை செய் களமும் தன்னகம் கொண்ட பழம்பெரும் பதியாம் கோட்டாறு என்னும் பகுதிக்குட்பட்ட இளங்கடை என்னும் எழில் சேர் ஊரில், பக்கீர் மீரான் சாகிப்- இடலாக்குடி சந்தித் தெருவில் வாழ்ந்த அமீனா தம்பதியாருக்கு 1874 ஜீலை 31 இல் தோன்றியவர் செய்கு தம்பிப் பாவலர். கல்வி ஐந்து வயதில் திருகுர்ஆனை ஓதத் தொடங்கினார். இளங்கடை ஆதாரப்பள்ளியில் எட்டாவது வயதில் அரைவகுப்பில் சேர்க்கப்பட்டு, இருபது நாளில் அவர் தம் அறிவாற்றல் கண்டு முதல் வகுப்பில் அனுப்பப் பட்டு, ஆறு மாதங்களில் நான்கு வகுப்புக்களையும் படிப்படியாக முடித்துக் கொண்டார். சங்கர நாராயண அண்ணாவியாரிடம் கல்வி கற்றார். சென்னையில் திருப்பாடல் திரட்டு ஹலரத்ஞானியார்சாகிப்அவர்களின் மெஞ்ஞானத்திருப்பாடல்திரட்டு நூலினை அச்சிட்டுவெளிக்கொணரும்முயற்சியில் 19வதுவயதில்சென்னைசென்றார். சென்னை பூரீபத்மநாப விலாசம் அச்சுக்கூடத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. (அதே அச்சுக் கூடத்தில் 1919இல் அச்சிடப்பட்டதுதான் ஷம்சுத்தாசீன் கோவை) 54