பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இட்டாபார்த்தசாரதி நாயுடு செய்கு தம்பிப்பாவலரின் தமிழாற்றலில் மனத்தைப் பறிகொடுத்த அச்சக உரிமையார் இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்கள் பாவலரைத் தமது அச்சகத்திலேயே தலைமைப்பிழை திருத்துவார் பொறுப்பினைத் தந்து சென்னையிலே வைத்துக் கொண்டார். பத்ம நாப விலாசம் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. தமது 27வது வயதில் சீறாப் புராணத்திற்கு உரை எழுதி வெளியிட்டவர் பாவலர். தேவாமிர்தப் பிரசங்கக்களஞ்சியம் வடலூர் ராமலிங்க சுவாமிகள் பாடிய தீஞ்சுவை அமுதமான கவிதைகளை திருஅருட்பா என்று பெரிதும் போற்றி வந்தனர் தொழுவூர் வேலாயுத முதலியார், கோ. வடிவேலுச் செட்டியார், மறைமலை அடிகள். இது அருட்பா தான் என்று வாதிட, கதிரைவேற் பிள்ளை திரு.வி.க.முதலியோர் அதை மருட்பா என்று கூறி வந்தனர். மருட்பாக் காரர்கள் கூட்டம் நடத்திய இடத்திலேயே மறுநாள் மறுப்புரைப்போர் கூட்டம் நடைபெறும். நமது பாவலர் அவர்கள் ஆணித்தரமான உரை அங்கு நிகழ்த்துவார். அது கேட்டு அருட்பா அணியினர் பாவலரைமகிழ்ந்து போற்றினார்கள். " காஞ்சிபுரம் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பெரிய கோயிலில், பூரண கும்ப மரியாதையுடன் பாவலர் அவர்கள் வரவேற்கப் பட்டு, 'தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்' என்ற பட்டம் சூட்டியும் கெளரவிக்கப்பட்டார். " ஷோடசாவதானி கி.பி. 1906 இல் தமது குரு சங்கர நாராயண உபாத்தியாயரைப் பார்ப்பதற்காக கோட்டாற்றிற்கு வந்தார் பாவலர். ஆற்றக்கோயா எனும் காரணப் பெயரையுடைய ஹசாறரத்து செய்யிது முஹம்மது அபூபக்கருல் ஐதுரூஸ் தங்கள் எனும் பெரியார் இடலாக்குடி வந்திருந்தார். அவரது தலைமையில் ஷோடச (16) அவதானங்களை அற்புதமாகச் செய்து ஷோடசாவதானி என்ற பட்டம் பெற்றார் பாவலர். சதாவதானி 1907 மார்ச் 10இல் விக்டோரியா நினைவு மண்டபத்தில் கண்ணபிரான் முதலியார் தலைமையில் பாவலர் நூறு செயல்களைக் கொண்ட சதாவதானம் செய்யப் போகிறார் என்ற அறிக்கைகள் திருச்சி, லால்குடி, தஞ்சை, மதுரை, காஞ்சிபுரம், திருநெல்வேலி முதலிய இடங்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் பறந்தது. கூட்டம் பெருந்திரளாகக் கூடியது. காஞ்சி மகாவித்துவான் இராமசாமி நாயுடு, தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர், பச்சையப்பன் கல்லூரி 42 செ.சதாசிவம், சேரநாட்டுத்தமிழ்ப்பெருமக்கள்.வரலாறு, நாகர்கோவில், 1947, பாகம்ll, பக்0ே. 43 கே.பி. செய்குதம்பி, பதிப்பாசிரியர், சதாவதானி செய்குதம்பிப் பாவலர், சென்னை, 1987, பக்47. 55