பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறிதாயிற்று எனவும் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவர் நைந்துருகிப் பாடியுள்ளார். நல்லியக் கோடன், குமணன் போன்ற சிற்றரசர்களுக்கும் பின்னர் அவ் ஈகைச் செந்துகத்தை பெருநிலக்கிழார்களும், வணிக வேந்தர்களுமே தாங்கினர். அவர்களுள் படிக்காசுப் புலவர், உமறுப் புலவர், கந்தசாமிப் புலவர், நமச்சிவாயப் புலவர் போன்ற கவிவாணர்களையும், இரவலர்களையும் ஆதரித்துப் போற்றியவரான 'செத்தும் கொடுத்தான் எனப் புகழ் படைத்த "வள்ளல் சீதக்காதி"யவர்கள், கடந்த 17-ஆம் நூற்றாண்டிலே சிறந்து வாழ்ந்திருந்தார். அவ்வடிச்சுவட்டிலே, ஏழை எளியோரையும் புலவர் பெருமக்களையும் தயையுடன் ஆதரித்து கடந்த 19-ஆம் நூற்றாண்டிலே சீருடன் வாழ்ந்திருந்தவர் தாம் எமது பாட்டனாராகிய V.S.T. ஷம்சுத்தாசீன் எனும் சிறப்புப் பெயர் பூண்ட வள்ளல் பெருந்தகை ஆவார். . மலையும் நதியும் பொதியில், பொதியம் என்னும் பெயர்களையும் கொண்ட பொதிகை மலை, தென்பாண்டி நாட்டின் மேற்கெல்லையாய் அமைந்தமையால் தென்னவன் பொதியில் என்றும், பாண்டியரின் மேலாண்மைக்குட்பட்ட சிற்றரசராக வேளிர் குலத்தைச் சேர்ந்த ஆய் மரபினர் அம்மலைப் பகுதியை ஆண்டு வந்தமையால் ஆய் பொதியில் என்றும் வழங்கப் பெற்றது. இப் பொதிகை மலைப் பகுதியை ஆட்சி புரிந்து வந்த கடையெழு வள்ளல்களுள் ஒருவனான மாவேள் ஆஅய் அண்டிரன் என்பான், 'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அலன், பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே”* என உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனும் புலவரால் சிறப்பிக்கப் பெற்றவன். - தமிழ் மலையாம் இப்பொதிகையில் பிறந்த வன்னி ** எனும் நதி நல்லாள், சந்தனத்தின் நறுஞ்சாந்து தடவியும், தென்றலின் தண்மை

  • புறநானூறு 134.
  • வன்னி தாம்பிரவன்னி

கர்ணன் என்பது கன்னன் என்றானாற் போன்று வர்ணி என்பது வன்னி எனவானது. 4