பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் துறைத் தலைவர் வேங்கடசாமி நாயுடு, புலவர் கா. நமசிவாய முதலியார், ஹிந்து ஜி. சுப்பிரமணிய ஐயர், தமிழ்த்தென்றல் திரு.வி.க., ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் மற்றும் பலரது முன்னிலையில் சதாவதான சாதனை புரிந்து சரித்திரத்தில் நிலைத்து நிற்பவர் பாவலர். - மகாமதி மகமதியருள் இவர் மகாமதியர் என்பதால் 'மகாமதி' என்றும் சதாவதானம் புரிந்ததால் 'சதாவதானி என்றும் பட்டங்கள் சூட்டிக் கெளரவிக்கப்பட்டவர் பாவலர். சதாவதானம் நிகழ்ந்த அன்று பாவலர்கள் பலர் பாமாலை சூட்டிப் புகழ்ந்தனர். அது 'சதாவதானச் சிறப்பு எனும் சிறு நூலாக வெளி வந்துள்ளது. திருமணம் பாவலர் தமது 33 வது வயதில் 1907 இல் முஹம்மது பாத்திமா பீவியை மணம் முடித்தார். பாவலர்க்கு மக்கள் ஐவர். அதில் ஆண்கள் நால்வர். கோட்டாற்றில் குடும்ப வாழ்க்கையை நடத்த பாவலர் நூல் வாணிகம் செய்தார். பாவலரிடம் பாடம் கேட்டுச் சென்ற புலவர்களும் பலர். "

  • பதினைந்து வயதான

இந்திய சுதந்திரப்போரில் 1920 ஆம் ஆண்டுகளில் நாஞ்சில் நன்னாட்டில் விடுதலை இயக்கம் தோன்றி வளர்ந்தது. டாக்டர் எம். இ. நாயுடுவின் வலக்கரமாக தூய கதராடையும், காந்திக் குல்லாயும் அணிந்து திகழ்ந்த பாவலரின் சொல்லாற்றல் காங்கிரஸ் இயக்கத்துக்குப் பெரிதும் வலுவூட்டியது. தென் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்திற்குப் பிரச்சாரம் செய்து பெரு வெற்றி பெற்றத் தந்தவர் பாவலர். இரவிப்புதூரில் 1924 இல் இரவிப்புதூரில் கதர் அணிவதை வற்புறுத்தி பேசிய பாவலர் கூறை என்றால் திருமணத்திற்குரிய புதுஆடை அதற்கு கைத்தறி ஆடைகளை எடுப்பது வழக்கம்; இறப்பின் போது பிணத்திற்கு போர்த்திட புது ஆடை எடுப்பர். அது மில் துணியாக இருக்கும். எனவே மண வாடையாக நாட்டுத் துணியும், பிணவாடையாக மில் துணியையும் அணிவர். நீங்களெல்லாம் மணமக்களா? பிணமக்களா ? என்று கேட்டார்; பரபரப்பு ஏற்பட்டது. மில் உடைகள் வீசி எறியப்பட்டு, வானளாவச் செந்தீ எழுந்தது; சுதந்திரத் தீ பரவியது. 46 4.கரு நாகராசன், அவதானக் கலை, சென்னை, 1983 பக்.96. 45 செ. பகலுமுகியிதீன், மகாமதிப்பாவலர், சென்னை, 1986, பக் 15,16. 46.சி. குமரசேபிள்ளை, அவதானக் கலைஞர், சென்னை, 1968, பக்102. 56