பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V.S.T. செய்கு மன்சூர் 1937 தேர்தலில் பாளையங்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற V.S.T. செய்கு மன்சூருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த பாவலர் 'மஞ்சள் பெட்டி, மங்கலப் பெட்டி, வெள்ளைப் பெட்டி, வெறும் பெட்டி என்று பேசினார். வாக்குகள் எண்ணப்பட்ட போது, எதிரணியில் நின்ற வேட்பாளரின் வெள்ளைப்பெட்டி திறந்தபோது அந்த முதற்பெட்டியில் ஒரு வாக்குகூட இல்லாதிருந்தது பாவலரின் வார்த்தைகளின் வலிவு தான் என்ன? " தேர்தல் காலங்களில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளால் நாட்டு மக்கள் காங்கிரசுக் கட்சிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். - இறுதி கி.பி. 1950 பிப்ரவரி 13 ஆம் நாள் பாவலரின் இவ்வுலக வாழ்வு நிறைவு பெற்றது. - ஒரும் அவதானம் ஒரு நூறு செய்திந்தப் பாரில் புகழ் படைத்த பண்டிதனைச் சீரிய செந்தமிழ்ச் செல்வனை செய்கு தம்பிப் பாவலனை எந்த நாள் காண்போம் இனி" என்று அவலமுற்று நாஞ்சில் நாட்டு நல்லிசைப் புலவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியுள்ளார். " ம.ப. செயிக் தலைவராகவும், செ.ப. ஜமால் முகம்மது செயலாளராகவும் கொண்டு, இயங்கிய சதாவதானி பாவலர் மன்றம், 1961இல் செய்குத் தம்பிப் பாவலர் நினைவு மலர் ஒன்றினை வெளியிட்டது. 47 சி. குமரேசபிள்ளை செந்தமிழ் வளர்த்த செய்கு தம்பி, சுசீந்திரம், 1997, பக் 114 செ. திவான், விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பாளையங் கோட்டை, 1994, பக் 169. 48.சொ. முருகேசமுதலியார், குமரி நாட்டுப் புலவர்கள், சென்னை, 1995 பக் 30. 49 சி. குமரேசன், குமரி மாவட்டப் புல்வர்கள் சுதந்திரம், 1987, பக்49, சி. குமரசேபிள்ளை, சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், நாகர்கோயில், 1980, பக் 17. 57