பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாமதி செய்கு தம்பிப் பாவலரின் இலக்கியப் பணிகள் பழந்தமிழ்ப் புலவர் மரபில் வைத்து எண்ணிப் போற்றத் தகுந்த பாவலர் அவர்களின் நூற்கள் இப்புவி உள்ள காலம் வரை நிலைத்து நிற்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருந்திட முடியாது. பத்திரிகை ஆசிரியர் சென்னையில் யதார்த்தவாதி', 'இஸ்லாமிய மித்திரன் என்ற இரு செய்தித்தாள்களை நடத்தியவர் செய்குத் தம்பிப் பாவலர். உரைநடை நூற்கள் தேவலோகக் கிரிமினல் கேஸ் அரிச்சந்திர சரித்திரம், சூர்ப்பநதை பங்கம், வாலிவதம், இலங்காதகனம், அதற்கு அப்பீல், அரம்பைப்பலவந்தப் புணர்ச்சி, கோபிகாஸ்திரீகள் வஸ்திராபகரணம், துரோபதை வஸ்திராபகரணம், அதற்கு புனர் விசாரணை, அதற்கு அப்பீல், கீசகன் பலவந்தம் என 8 விஷயங்களை 250 பக்கங்களில் எழுதி வெளியிட்ட பாவலர், அந்த நூலின் 2ம் பதிப்பை 1908இல் பர்டன் அண்டு கோ சொந்தக்காரர் F.A. பொன்னுசாமி முதலியார் அவர்களின் துணைவியோடு, பிரஸிடென்லி அச்சியந்திர சாலையிற் அச்சிட்டு வெளியிட்டார். ஒரு ரூபாய் எட்டனா விலையில் வெளியான அந்த நூலின் முதற்பக்கத்தில் பாவலரே கையொப்பமிட்டு, கையெழுத்து இல்லாத புஸ்தகங்கள் திருட்டுப் புஸ்தகங்கள் என்றும் அறிவித்தார். வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ் 1923 இல் ஒரு ரூபாய் நாலனா விலையில், சென்னை எம். ஆதி அண்டு கம்பெனியாரின் சந்திரா பிரஸில் பதிப்பிக்கப்பட்டு, மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர்களுள் ஒருவரான செய்கு தம்பிப் பாவலரால் 312 பக்கங்களைக் கொண்டு வெளியிடப்பட்ட நூல் ‘வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ் ஆகும். சீறாப் புராண உரை - கி.பி. 1902 இல் சீறாப் புராணத்தின் விவாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டங்களை உரையுடன் வெளியிட்டவர் பாவலர். சென்னை84ஆசாரப்பன் தெருவில் இயங்கி வந்த இட்டா பார்த்தசாரதி நாயுடுவின் அலுவலகத்திலேயே முகம்மதிய புத்தக ஷாப் என்ற பெயரில் பாவலர் இந்த நூலை மூன்று ரூபாய் விலைக்கு விற்றார்கள். 855 பக்கங்களைக் கொண்டு வெளிவந்த அந்த நூலின் 58.