பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதியில் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்றும் அறிவித்திருந்தார். ஹிஜூறத்துக் காண்டத்திற்கு உரை எழுதி 1026 பக்கங்களில் கி.பி. 1908 இல், மேலப்பாளையம் பிரபல வர்த்தகர் வ. அ. மலுக்கா அலித்தரகனாரவர்களுக்கு உரிமையாக்கி பாவலர் வெளியிட்டார். பின் 1912லும், 1929லும், நாச்சி குளத்தார் பதிப்பாக 1999லும் இவ் உரைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளது. சீறா நாடகம்' என்னும் நூலையும் பாவலர் எழுதினார். நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரத்தையும் பாவலர் உரை. நடையில் எழுதியுள்ளார். - பாவலரின் செய்யுள் நூல்கள் திருக்கோட்டாற்றுப்பதிற்றுப் பத்தந்தாதி ஒரு பாடலின் இறுதியில் நிற்கும் அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ, சொல்லோ அடுத்த பாடலின் ஆதியில் வருமாறு பாடுவது அந்தாதி. இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. பாவலர் தம் ஊராகிய கோட்டாற்றில் வாழ்ந்த தம் குல குருவாகிய ஞானியார் அப்பா மீது பாடிய நூல் திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி. கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழும் பாவலர் பாடியுள்ளார். " கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை - மலர் பல கோக்கப்பட்டு அணிபெற அமைவது மாலை; பாடல்கள்.பல சேர்க்கப்பட்டு ஒரு கருத்தை விளக்கும் நூல் மாலை ஆகும். கீழக்கரை கல்வத்து நாயகம் என்னும் இஸ்லாமிய மாமேதையின் மீது பாவலரால்' பாடப் பெற்ற காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்களை உடைய, சுரிதகம் இல்லாத் தரவு கொச்சகக் கலிப்பாவெனும் ஒரினப் பாக்களால் கோக்கப் பட்ட மாலை கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை ஆகும். இதன் முதற்பதிப்பு 1990 லும், அதன்பின் மேலப்பாளையத்திலிருந்து ஒரு பதிப்பும் வெளியாகியுள்ளது. - நபிகள் நாயக மான்மிய மஞ்சரி - மான்மியம் என்றால் பெருமை. மஞ்சரி என்பது பூங்கொத்து. அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பெருமையாகிய பூங்கொத்து என்னும் பொருளில் பாவலரால் பாடப்பட்ட நூல் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி ஆகும். - இஸ்லாத்தின் ஐம்பெரும் கொள்கைகளையும் எடுத்து இயம்புகிற இந்த நூல், நான்கு அடிகளால், நான்காவது அடி மிக்கு வந்த வெண்டளைக் கொச்சகக் கலிப்பாக்கள் 102 கொண்டது. உத்தமபாளையம் கே.சி. முகமது இஸ்மாயில் 50 செய்கு தம்பிப் பாவலரின்நபிகள் நாயகமான்மிய மஞ்சரி, அகரம் பதிப்பு, 1976, பக் 36. 5ට්‍ර