பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களின் பொருளுதவியோடு நாஞ்சில் ஆரிது முயற்சியுடன் 1976 இல் முதற் பதிப்பு வெளி வந்தது. திருநாகூர்த் திரிபந்தாதி செய்யுள் அடிகள் நான்கிலும் முதலெழுத்து முதல் பத்தெழுத்துக்கள் வரை சொல்லால் ஒன்றிப் பொருளால் வேறுபட்டு நிற்பது யமகம் எனப்படும். இரண்டாம் எழுத்து முதல் பத்தெழுத்துக்கள் வரை சொல்லால் ஒன்றிப் பொருளால் வேறுபட்டு நிற்பது திரிபு எனப்படும். இவை சொல்லணியைச்சார்ந்தவை. யமகப் பாடல்களை அந்தாதியாகப் பாடுவது யமக அந்தாதி யென்றும், திரிபுப் பாடல்களை அந்தாதியாகப் பாடுவது திரி பந்தாதி யென்றும் கூறுவர். ' நாகூர் ஆண்டவர் அருள் வேண்டி பாவலர் பாடிய நூல் திருநாகூர் திரிபந்தாதி என்றாலும், இந்த நூலுள், நாகூர்ஆண்டவனின் பெயர்ஜயன், நாகையன், நாயகம், அண்ணல் என்பவை போன்ற சொற்களிலேயே வருகின்றன. நீதி வெண்பா ്liഖഖ് சொல்லிலும், செயலிலும் நீதியை விரும்ப்பவர். அறிஞரிடையே உரையாடிக் கொண்டிருக்கும் போதும், மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் போது, இடித்துரைத்தும், போற்றியும் உணர்த்த வேண்டிய நீதிகளை உணர்த்தி வந்தார். அவ்வாறு பாவலரால் நீதிகள் வெண்பாக்களாகவே பாடப்பட்டது. அவைகளும், பாவலரின் தனிப் பாடல்களும் அச்சேறாத நிலையிலேயே இருக்கின்றன. அச்சில் வராத நூல்கள் உத்தம பாளையம் முகமது இஸ்மாயில் கோவை, சசிவோத்தமக் கோவை, அழகப்பக் கோவை ஆகியவை அச்சில் வராத முழுமை பெறாத பாவலரின் நூற்கனாகும். சசிவோத்தமக் கோவை சர்.சி.பி. இராமசாமி ஐயர் மீது பாடியதாகும். * - நாகைக் கோவை செங்குத் தம்பிப்பாவலர் நாகைக் கோவை பாடியுள்ளார். ஆனால் அதுவும் இதுவரையில் அச்சேறவில்லை. " 51 சி.கு.ப.சேபிள்ளை, செந்தமிழ் வளர்த்த செய்குதம்பி, சுசீந்திரம், 1986, ! குதி 2, பக் 35. 52 தமிழ் வளர்த்த பெரியோர்கள், தமிழக அரசு வெளியிடு, பக்.20. 53 ஆர்.பி.எம்.கனி, இஸ்லாமிய இலக்கியக் கருவூலம், தென்காசி, 1963, பக்176, 192. 60