பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் கடலின் ஷம்சுதாசீன் கோவை தொண்டிச் சான்றோர்களால் 'கலைக்கடல் என்றும், திண்டுக்கல் சான்றோர்களால் அல்லாமா டாக்டர் என்றும், நாஞ்சில் நாட்டவர்களால், தமிழ்ப் பெரும்புலவர், என்றும் செய்கு என்று தந்தையாராலும், தம்பி’ என்று தாயாராலும் பாவலர் என்று பாரோராலும் பாராட்டப் பெற்றவர் செய்கு தம்பிப் பாவலர். - மேலப்பாளையத்தில் பிறந்து வாழ்ந்து, பெரும்புகழுடன் மறைந்த பெரியார் ஷம்சுத்தாசின் அவர்கள் மீது ஷெய்கு தம்பிப் பாவலரவர்களால் பாடப்பெற்ற 'கோவை ஷம்சுத்தாசீன் கோவை ஆகும். சொல் பொருள் அணிகள் பல அமைந்து கற்றோர் வியக்கும் வண்ணம், 425 கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களைக் கொண்டு விளங்குவது இக் கோவை ஆகும். - - 425 பாடல்களிலும் ஷம்சுத்த்ாசீன் பெயர் இக்கோவை நூலில் இஸ்லாமியக் கொள்கை விளக்கங்கள் என்று அதிகம் இடம் பெறவில்லை. தமிழ்ப்பா மரபுகளும் பழக்க வழக்கங்களுமே இடம் பெற்றிருக்கின்றன. அறபுச் சொல்லாட்சி மிகவும் குறைவாகவே உள்ளது. பாட்டுடைத் தலைவரான ஷம்சுத்தாசீன் பெயர் இதில் இடம் பெற்றுள்ள 425 பாடல்களிலும் இடம் பெற்றிருக்கிறது. எத்துறையைச் சார்ந்த பொருளாயினும் அங்கு தம் நெஞ்சில் நிறைந்துள்ள புரவலரைப் போற்ற ஆசிரியர் மறந்துவிட வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 55 மாரியென வாரி வழங்கும் வள்ளல் பாட்டுடைத் தலைவரான வள்ளல் வ.செ.த. ஷம்சுத்தாசீன் அவர்களது சிறப்பைப் பற்றி கோவையின் இறுதியில் ஷெய்குத் தம்பிப் பாவலர் பாடிய பாடல் இதோ: 54. கே.பி.எஸ். ஹமீது (பாவலரின் மைந்தர்) மாகாணத் தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய உரையினை 31.7.99 இல் நேரில் கேட்டவர் பதிப்பாசிரியர் செ. திவான். * 55 மு. முகம்மது உவைஸ், பீ.மு. அஜ்மல்கான், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, தொகுதி 3, மதுரை காமராசர் பல்கலைக் கழக வெளியீடு, 1994, பக் 319, 321. 61