பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'செய்யா ளெனவருந் தேவியு நானுஞ் செகதலத்தோர் மெய்யாருயிரென மேவிக் கலந்தன மேலுமின்றும் பொய்யாவரத்துர வோன் ஷம்சுத்தாசின் பொருப்பிலவன் கையாய்ப் பொழிபொழி மாதமும் மாரி கன மழையே” (ஷம்சுத்தாசீன் கோவை நிறைவுப் பாடல் 425) தலைவியும் நானும் ஒருடலும் அதனிடத்துப் பொருந்திய உயிரு மெனச் சேர்ந்தோம். இனி எக் காலத்தும் பொய்க்காத ஆசிர்வாதத்தையுடைய அறிஞனான ஷம்சுத்தாசீன் கைகளைப் போன்று பெருமை பொருந்திய மேகமே, மாதத்திற்கு மூன்று மழைகளைப் பொழிவாயாக! பொழிவாயாக எனக் கூறுகின்றான் தலைவன். - வள்ளல் ஷம்சுத்தாசீன் அவர்களது பெருமையினை முழுவதுமாக அறிந்திட, இலக்கிய இன்பம் பெற்றிட ஷம்சுத்தாசீன் கோவை முழுவதும், இதோ உங்கள் கரங்களில் ----- - செ. திவான். (பதிப்பாசிரியர்) 6.4.2000 கல்வித் தந்தை சுலைமான் இல்லம் 106F, 4A திருவனந்தபுரம் சாலை பாளையங்கோட்டை. © 0462 - 572665 Ꮾ2