பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னாட்டிற் குமரிகல்கத் தாகடலூர் புதுவைசென்னை தேர்தெ லுங்க நன்னாட்டிற் காக்கியநா டாவிலுங்கொச் சீயதிலு நவிலும் பர்மா வின்னாட்டிற் றிகழிரங்கோன் குவ்வுமாண் டலேமிஞ்சா னின்னு முள்ள பன்னாட்டி லும்பரந்த வாணிபச்சா லைகள்பல படைத்த யோகன். வறியவருக் கீவதுவே யிகையென வள்ளுவனந் நாள்வ குத்த நெறியதனுக் கிலக்கியமா நிற்பர்சிலர் நித்தநித்த நிறையச் சொன்னங் குறியறிந்து கொடுப்பதன்றிக் குடியிருக்கக் குடில்பல்சதங் குயிற்றி ஹாமீம் புரியதென்னும் பெயர்புனைந்து வறிஞருக்கெ லாமளித்த புண்ய சீலன். எத்தானத் தினுமன்ன தானமதே யேற்றமென விசைப்பர் பல்லோ ரத்தானத் தினுமிக்க தாகும்வித்தி யாதான மதற்கீ ரைந்து பத்தாயி ரங்கொடுத்தக் குடியேற்றத் தார்க்காகப் பள்ளி யொன்றுங் கத்தாவைத் தொழுதிடற்கோ ராலயமுங் கட்டிவைத்த கணத யாளன். ஆக்கமிலாத் தனமதென்று மதைப்படைத்த மாந்தரெலா மவனி மீது நோக்கமுதற் காதுகாங் கால்களெனு மங்கமொடு நோயில் லாத வாக்குமிருந் தாலுமவை யில்லாராய் வாழ்வரென வழங்கு முன்னோர் வாக்கையெலாம் பொய்யாக்க வாக்கையெடுத் தவதரித்த வாய்மை யாளன் இன்னாசெய் தார்நான விதஞ்செய்த லேமுறையென் றியம்பு மாறே மின்னாளுந் தானுமில்ல மிழிந்தயலி னோரிடத்து மேவுங் காலை யொன்னாரி னுரைக்கிணங்கி யுபயபுத்தி சர்க்கும்விட வுண்டி யிந்த வன்னானுக் காயிரங்கி யபயமுட னர்த்தமளித் தாண்ட வண்னல். இத்தகைய வாண்டகைமேற் கோவையொரு நானூற்றி னோடி ரண்டு பத்ததன்மே லைந்துகவி பாலியற்றிப் பார்க்களித்தான் பகரு மந்த வத்தமனா ரோவென்னி னுரைக்குதுங் கோட் டாறுநக ருறைந்திடுஞ்செய் குத்தம்பிப் பாவலனா முத்தமிழின் சாகரமாங் குரிசின் மாதோ, தேவாமிர் தப்பிரசங் கக்களஞ்சி யம்மெனவுந் தெரிந்த மேலோர் நாவான்ம காமதியா னெனவுமிரு பட்டங்க ணல்கப் பெற்றுப் பூவாருஞ் சென்னைமிசை யவதான மொருநூறும் புரிந்த விந்தப் பாவாண னருள் கோவைப் பயன்விரித்த லெவர்க்கும்வெகு பார மம்மா. நல்லாசிரியன் பத்திராதிபரும் மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவருளொருவரும் சென்னை வேப்பேரி குயின்மேரி காலேஜ் 35