பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழுவியும், குறிஞ்சி நிலத்து மணமலர்கள் ஏந்தியும் நடைபயின்று கனிமவள நிலத் துடறுத்துப் பாய்ந்து தாம்பிர வருணமும் (நிறம் - குணம்) பெற்றமையால் தாம் பிரவர்ணி எனப் பெயர் கொண்டவள். ஆஅயது வள்ளன்மையைப் போன்றே வன்னியாறும் வற்றாது ஒடி நெல்லைச் சீமையை வளப்படுத்திப் பின்னர் முத்துக்குப் பெயர் பெற்ற கொற்கையினருகே கீழைக் கடலில் கலக்கின்றது. முன்னோரும் தோற்றமும் ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், பாண்டியர் பழம்பதியில் iறார்ந்து வாழ்ந்திருந்த எமது முன்னோர் உள்ளிட்ட பெருமளவிலான குடும்பங்களைச் சேர்ந்தோர் அரசியல், சமூகவியல் சார்ந்த கரணியங்களால் வடகரையினின்றும் நீங்கி, நெல்லை மாநகரத்திற்கு தென்கிழக்கே மூன்று கல் தொலைவில் தாம்பிரவர்ணி நதி தீரத்திலேயமைந்திருந்த மருத நிலவூர்ப் பகுதியின் தென் மருங்கினை வந்தடைந்து ஆங்கே மனைகள் அமைத்து வாழத் துவங்கினர். - அவ்வழி முறையில் எமது குடும்பக் கிளையின் , முதற்றந்தையார் நாகூர் மீறா திரகனார் அவர்கள், அன்னாரது மகனார் ஷெய்கு உதுமான் தரகனார் அவர்கள், அன்னாரது மகனார் மீறா முகையதீன் தரகனார்.அவர்கள், அன்னாரது மகனார் ஷெய்கு மன்ஸ்-ர் தரகனார் அவர்கள், அன்னாரது மகனாரும் எமது பாட்டனாருமான ம், r.ழி, ஷம்ஸ் தாளபீம் தரகனார் (ஷம்சுத்தாசீன்) அவர்கள் தமிழாண்டு 1021-ல் சித்திரைத் திங்கள் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று (கி.பி. 1845-ல்) பிறந்தார். ஈந்து புகழ்க் கொண்ட அப்பெருமகனை ஈன்று மகிழ்ந்த மங்கை நல்லாரின் பெயர்ஹஸன் மீறாபீவி என்பதாகும். - - - மேலப்பாளையம் காலந்தோறும் வந்தடர்ந்த மக்கட்பெருக்கத்தினால் மிகவும் - வளர்ச்சியுற்ற எமதுர் முன்னாளில் மங்கை நகர், மங்கையர் பதி, மங்கையர்க் கூடம், மங்கா நல்லூர், திருமங்கை நகர் என்றவாறெல்லாம் வழங்கப்பட்டு வந்து, அதன் பின்னர், பாளையம் அமைந்திருந்த பாளையங்கோட்டைக்கு மேற்குப் புறமிருந்த காரணத்தால் மேலப்பாளையம் எனப் பெயர் பெற்றது. இவ்வூரைச் சேர்ந்தவர்கள் கடல் கடந்து சென்று இரங்கூன், மாண்ட்லே, கண்டி, பினாங்கு, சிங்கப்பூர் முதலிய பிரதேசங்களிலும், 5