பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப்பண்டிதருமானமள-ள-g. கா. நமச்சிவாய முதலியார்.அவர்கள் இயற்றியது. அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம். பாமருவும் புகழ்படைத்த மேலப்பா ளயம்புரக்கும் பண்பு வாய்ந்தோன் நாமருவுங் கவிவாணர் நயமருவப் பொருள்வயங்கும் நலமே சான்றோன் காமருவு கொடையாளன் ஷம்சுத்தாசின் பெயர்கொள் காவ லோன்மேற் தேமருவு சுவைமருவு கோவைநூல் வளம்பெறவே செய்திட் டானால். எவ்வகைய பனுவலையு மிம்மென்னு மளவையினி லியற்ற வல்லோன் செவ்வியநற் றமிழ்ப்புலவன் ஷெய்குதம்பிப் பாவலனாத் திகழு மேலோன் அவ்வியலின் நூலகத்துக் காணுமரும் பொருளனைத்து மறிவித் தானால் திவ்வியநற் புலமைபழுத் தெழுமல்கான் அலியென்னுஞ் சீரி யோனே. இந்நூலாசிரியரது மாணாக்கருளொருவரான தெங்கம் புதுரர் வித்வான் ம-ள-ள-g, சாத்தான்குட்டிப்பிள்ளை அவர்கள் இயற்றியது. அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம். சீரேறு கலையுடையான் செய்யதிருக் குணமுடையான் சேணு லாவுங் காரேறு கரதலத்தான் காட்சிமிகு ஹாமிமெனக் கழறு மூரான் பாரேறு புகழுடையான் பரம்பொருளை யுளநிறுத்தும் பான்மையுள்ளான் தாரேறு செழுமார்பன் ஷம்சுத்தா சீன்பெயர்கொள் தக்கோன் மீதே தெள்ளியபாற் கடல்கடைந்து தேவர்பொருட் டாலமுதம் திரட்டுமாபோ, லொள்ளியதீந் தமிழ்க்கடலி னுயர்வுபெறு மகப்பொருளி லோதுமன்பி, னுள்ளியவைந்திணைக்கோவையெனவொருநூலுவந்திசைத்தானுலகமுய்யத் தள்ளியவெவ் வினைதுணித்த தக்கோனை யாவனெனச் சாற்றக் கேண்மோ விண்பட்ட தருமலியூம் பொதிகையில்வாழ் குறுமுனிவன் விரித்த வைந்து, பண்பட்ட விலக்கணமு மிலக்கியமு முலகுவப்பப் படித்துத் தேர்ந்தோன், கண்பட்ட மணிபோல்வான் கருதுமுயிர் பான்மையுளான் கற்றோர்போற்று மெண்பட்ட புகழுடையா னிகழ்வடையான் கோடைநகரிருந்து வாழ்வோன். முன்னரிய சென்னைதனில் மூதறிஞர் பலர்கூட முறையே நூறு பன்னரிய வவதானப் பண்பெடுத்துக் காட்டிமிகு பரிசு பெற்றோ னுன்னரிய புலவரெனு முடுக்களிடை மாமதியா யொளிரு மேலோன் மன்னரிய நலனுடையான் ஷெய்குதம்பிப் பாவலனா மதிவல் லோனே.