பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரது மாணாக்கருளொருவரான கோட்டாறு வித்வான் ம-ள-ள-பூர், பி. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் இயற்றியது. கொச்சகக்கலிப்பா, பூமனக்கும் பொழிலுமெழிற் புன்ைமணக்குந் தடமுமரு னாமனக்குந் தமிழுமிரு நலமனக்கும் புலனுடைய தேமணக்கு மறிவினருந் திகழவமர்ந் துயருறுநற் கோமணக்கும் புகழ்மணக்குங் கோட்டா றெனும்பதியில். எண்ணருமெய்ஞ் ஞானியா ரெனுமுனிவர் மகமரயே பண்ணியால் லறப்பயனும் பகர்தரும்பன் னுாலுணர்வி னுண்ணியபக் கீர்மிறான் கோன்மையுஞ்செந் தமிழணங்கு நண்ணியமெய் யோகமுமே நல்லுருக்கொண் டெழுந் தவென. உதித்துமிகு கலைதெளிந்து முட்பொருளின் பயனுளத்திற் பதித்துமயங் கியபொருட்குப் பகர்தருக்க நூலோரும் மதித்திடநல் லுரை வழங்கி மணந்தருசிர் வள்ளுவர் நூல் விதித்தபடி நடைபயின்று விளங்குறுஞ்சற் குணமேலோன் செந்நெல்வளர் திருநாகூர்க் குத்திரிபா மந்தாதி பன்னருந் தண் கோட்டாற்றுக் குப்பதிற்றுப் பத்துமுதற் சொன்னவன்றன் றுயபெரும் புகழுடையான் துகளடையான் அன்னவனா ரென்னின்மிக வன்புளனால் வம்பிலனே. என்னிதயத திருளுடைலித் தெழிறருதற் கெந்நாளும் தன்னருகிற் றணியிருத்தித் தகுகலைகள் பலமொழிந்தே யுன்னரும்பே ரீரைம்பா னவதான மொருங்கியற்றும் பன்னருஞ்சிர் செய்குதம்பிப் பாவலவன் பரிவினொடு. பண்பரவு புகழ்மேலப் பாளையமாம் பெரும்பதியில் விண்பரவு கொடையாலே மேவியசி ரேவிரும்பும் எண்பரவு மெழில்ஷம்சுத் தாசீனா மிருந்தவன்றன் றிண்பரவு புயவலியின் சிறப்பொளிறற் கெண்ணியரோ, எழுத்துமுத லிலக்கணமு மிலக்கியத்தின் பெருஞ்செறிவும் பழுத்தொழுகிப் படிக்குநர்க்கும் பகளுநர்க்கும் பழகுநர்க்கும் விழுத்தகுசி ரறிவுதர மேன்மையுடை யகப்பொருளால் வழுத்தினனைந் திணைக்கோவை மகிதலத்து வளமையுற 68