பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கண்டு பொருள்கண்டு தொடைகண்டு நடைகண்டு முற்கண்ட நற்சுவையே முதிர்கண்ட வந்நூற்குக் கற்கண்டு சர்க்கரைமுக் கனியமிழ்திற் றுணைகாணேன் மற்கண்ட நாக்கொண்டு வாயார வாழ்த்துதற்கே. இந்நூலாசிரியரது மாணாக்கரு ளொருவரும் கோட்டாறு ஹையர்கிரேட் செகின்டரி ஸ்கூல் தமிழ்ப் பண்டிதருமானபறக்கை, ம-ள-ள-பூர், எம். குமாரசாமிப்பிள்ளை அவர்கள் இயற்றியது. நேரிசை வெண்பா. வெற்றி தருங்கரத்தான் வேள்வும்சுத் தாசீனாங் கொற்றவன்றன் மார்பங் குலவுதற்கே - கற்றவர்கள் உய்குமமு தாப்புனைந்தா னோரைந் திணைக்கோவை செய்குதம்பி பாவலவன் றேர்ந்து. இந்நூலாசிரியரது மாணாக்கருளொருவரானகோட்டாறு வித்வான், ம-ள-ள-பூரீ, கிருஷ்ணசாமிப்பிள்ளை அவர்கள் இயற்றியது. நேரிசையாசிரியப்பா. திருவளர் தாமரைத் தீம்பொழி லுடுத்த மருவளர் பாண்டி வளநாட் டின்கண் தண்டுறை மேவுந் தாம்பிர வன்னியும் வண்டுறை சோலையு மருங்கு விளங்கும் ஹாமீம் புரமெனு மரும்பதி வாழுஞ் சோமி வெண்குடை தூக்கிய செல்வன் தக்கோன் ஷம்சுத் தாசீ னெனும்புகழ் மிக்கோ னாகம் விளங்க வைந்திணைக் கோவை யென்னுங் குலவிய வாரம் மேவச் சூட்டினன் விரிநீர்க் கோடைப் பதிவாழ் செல்வன் பண்புறு குணத்தோன் கதிபெற வெற்குத் தமிழ்கற் பித்தோன் 69