பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப் பியமுதல் தோன்றி லஷனமும் பல்காப் பியமும் பயிறகு நாவினன் சொன்னய முதலாச் சொன்னபன் னயமுந் தோன்றப் பாடுந் தூயநற் கவிஞ னுன்னு மவதான மொருநூறும் பன்னிய செய்குத் தம்பிப்பா வலனே. இந்நூலாசிரியரது மாணாக்கருளொருவரான தாமரகுளம் ம-ள-ள பூர், எம். சிவதானுக்கவியராயரவர்கள் இயற்றியது. நேரிசை வெண்பா. பொன்னணிகொண் மாடமலி ஹா மீம்புரிக்கோர் மன்னனென வந்துதித்த வள்ளலெனும் - மின்னோளிசேர் கோவை பலபுனைந்த கோன்மைஷம்சுத் தாசீன்மேல் கோவையொன்று செய்தளித்தான் கூர்ந்து. சீரார்செய் குத்தம்பிச் சீரியன்றன் திம்பாவை ஆரார் புகழாதா ரம்புவியிற் - பேராரும் கண்மணியா யென்னுட் கலந்துநின்ற கற்பகமா யெண்ணுங் கவிராச ரேறு. ஹாமீம். பிஸ்மில்லாஹறி. சிறப்புப்பாயிரம். சென்னை பச்சையப்பன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர்ம்-ள-ள-பூர், கா. ர. கோவிந்தராஜ முதலியார் அவர்கள் இயற்றியது. அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். சீர்கொண்ட குணங்களுக்குச் செவ்வியநல் லியவிடமாய்த் திகழு நல்லோன், ஏர்கொண்ட நிலமெல்லா மெழில்கொண்ட தன்புகழே யிலக வைத்து, நார்கொண்ட மனத்தோர்க ணன்மொழிகொண் டினிதுரைக்கு நலமே கொண்டோன், கார்கொண்டகொடைக்காத்தோன்கவின்கொண்டநன்முகத்தோன்கனிந்தசொல்லோன். உய்யுநெறி முறைக்கு றுநல் லுறுதியெலா மினி துனரா வுலக முய்யச் செய்யவமு தனையவருந் திங்கவிகள் பலவியற்றிச் சிறந்தோர் தாமும், 70