பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அய்யனெனப் பணிந்திடச்சா ரருண்ஞானி யரிச்சாய்பா மலர் பொற்பார், துய்யவடி யிணைக்கமலந் துன்னவுறு கயமெனவே துலங்கு நெஞ்சன். இசையாருங் களிமழலை யேய்ந்து றுதன் மக்களுக்கா யிந்த நஞ்ச, வசையாரு மொருவனுக்கு மதிபுலத்தா னலம்புரிந்து மாசை தந்த, அசையாத வறநெறியோ னளியினுக்கோ ராகரமா யமைந்த மேலோன், இசை யாரும் விழைதருஞ்சீர் வெட்டுவாங்குளந்தனக்கிங் கினாந்தாரானோன் தண்மதிநேர் குளிர்முகத்துச் சார்சென்னு மரசர்பிரான் றந்த வொப்பில், மண்மதிகீர்ப் பொற்பதக்க மாண்புறுதன் றகைமையினால் வாய்க்கப் பெற்றோன். பண்மதிக்கு மொழிமழலைப் பைங்குழன்மெல் லிடைமடவார் பார்த்து றாநாள், விண்மதிக்கு மிகத்தளர்ந்து மெலிவுற்று மனங்கவலும் வேளே போல்வான் பேசரிய பெருஞ்செல்வன் பெருமைமிகு வாணிபத்திற் பிறங்கு கிற்போன் மாசிலருண் முகம்மதிறை மாமறையி னெறியகலா மாண்பார் நெஞ்சன், தேசுறுநல் ஷம்சுத்தா சினெனப் பேர் செறிந்திலகு செம்மை யோன்றன் ஆசிலருங் குணங்களெலா மகத்துன்னி யதனாலா மன்பு துரண்ட பொன்னணியி னன்மணிகள் பொருத்தியவாத் தன்னரிய புலமை சான்றன் பன்னணிகொண் டினிதிலகும் பாக்களிடை யவன்புகழே பதிய வைத்து, மன்னவிரு மியற்றமிழின் வளஞ்சார்ந்த கோவையொன்று வழங்கி னானால், முன்னருஞ்சொற் புலவோர்கண் மூதறிஞ னிவனென்றுமொழிய மன்னோ. அன்னவன்றா னல்லாறா மருங்கோட்டின் வரம்புக்கு ளமைத லாலே இன்னலஞ்சேர் கோட்டாறென் றினிதியம்பும் பதியினிடை யிலகி வாழ்வோன் உன்னருஞ்சீ ரவதான மொருநூறு நன்கியற்றி யுவகை யோடு, மன்னுமெழிற் சொற்புலவோர்மாமதியென்றிசைத்திடுநன் மாண்பு பெற்றோ பண்டையருந் தமிழ்நூற்கள் பலவுணர்ந்தோ னரியகுறான் பகர்ந்த மாசில், எண்டயங்கு நெறிநிற்போ னிசைசெய்குத் தம்பிப்பா வலனென்றோதும் பண்டழையுங் கவிவாண்ன் பண்புடைய நட்பாளன் படியிற் சீர்த்தி எண்டிசையுந் தழைவித்தோ னின்மொழியன் பன்னலஞ்சார்ந் திலகு வோனே. ೨/ಕಠ7೧೧7ಹ கோவையகத் தரும்பொருளை யாவரு மே யறியும் வண்ணம் பன்னுமீரும் பதவுரையைப் பகுத்தளித்தான் பாங்காகப் பகரிற் செய்ய பொன்னினுக்கும் பொன்னாகிப் பொலிகுணத்தான் வாணிபத் தின் புலமைமிக்கான் உன்னருஞ்சீர்ப் புகழ்மணமிவ் வுலகமெலாம் பரவவுறு முறுதி யாளன் 7i.