பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாமீம். பிஸ்மில்லாஹி. ஷம்சுத்தாசீன் கோவை காப்பு. கட்டளைக்கலித்துறை. திருவார் மருமநற் செய்குமன் சூர்தினஞ் செய்தவமோ ருருவா யமைந்தபு மான்ஷம்சுத் தாசி னுவந்தணியுங் கருவா ரகப்பொரு ளைந்திணைக் கோவை கழறநித மருவா ருருவி னகப்பொருட் குள்ள மமைக்குதுமே, களவியல். அஃதாவது-பொருளதிகாரத்துட் கூறப்பட்ட உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் பிறவுந் தம்முளொத்த பதினைந்தாண்டும் பத்து மாதமுஞ்சென்ற தலைவனும் பதினோராண்டும் பத்துமாதமுஞ்சென்ற தலைவியும் கொடுப்போரும் பிறருமின்றி யூழ் வயத்தாற் றாமேயெதிர்ப்பட்டுப்புணர்தற்றன்மை. இங்ங்னம் புணர்தல் அகப்பொருளிற் கூறிய எண்வகை மனத்துட் காந்தருவமணமாய்க் கைக்கிளை முதல் வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதலறாகிய பதினேழு கிளவித் தொகைகளையுடையது; அவை வருமாறு: கைக்கிளை. அஃதாவது-தலைவன் மாட்டாவது தலைவி மாட்டாவது நிகழுமொரு தலைக்காமம்; அவற்றுளிது-தலைவன்பாற்படுமொருதலைக்காமமாய்க்காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என நான்கு வகைப்படும்; அவை வருமாறு: காட்சி. (இ-ள்.) தலைவன் தலைவியை ஒரு பூஞ்சோலையிடத்துக் காணுதல். மாவே தழைத்து வனசமுங் கோங்கு மருவியல்லிப் பூவே புணர்ந்து புதுநற வேற்றளி பூண்டுபுகழ்க் கோவே யெனவரு வோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பின் காவே சிறப்ப நடுவிலொர் பூங்கொடி காண்கின்றதே. (/) 7 3.