பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/78

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஐயம்.

(இ-ள்.) கண்ட தலைவன் இவள் எந்த வுலகத்துப் பெண்ணோ? வென்று சந்தேகப்படுதலைக் கூறுதல்.

வானோ புவியோ மலையோ கடலோ மதியிரவி
தானோ வனசத் தனித்தவி சோவுற்ற தண்டமிழ்க்கோர்
கோனோ வெனவருள் வோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பின்
கானோ டொளிதரு வாளிரு டந்தவக் காவகமே.

(2)


துணிவு

(இ-ள்.) சந்தேகிக்கப்பட்ட தலைமகள் பாதம் பூமியிற் படிதலாலுங் கண்புடை பெயர்ச்சியாலும் பூலோகத்துப் பெண்ணெனத் தெளிந்து கூறுதல்.

காலே பதிந்தன கண்ணே யிமைத்தன காணுமலர்
மேலே புலர்ந்தன மெய்ந்நிழல் கண்டன மேவுமிவற்
றாலே யரசர்பி ரான்ஷம்சுத் தாசீ னருட்சிலம்பின்
பாலே யமரிட மன்றிமற் றில்லையிப் பாவையர்க்கே.

(3)

குறிப்பறிதல்.

(இ~ள்.) தெளிந்த தலைமகன் தலைவியின் வேட்கை அவள் பார்வையாற் றன்னிடத்துள்ள தென்றறிதலைக் கூறுதல்.

படையேறு கைத்தலத் தோன்ஷம்சுத் தாசீன் பனிவரைசேர்
தடையே யிலருளர் நெஞ்சென் றிரண்டொரு தண்கமலப்
புடையே சுமந்தஞர் நீத்தல்செய் பண்டிதர் போன்றவிவ
ளிடையே யிலையா லினித்தன மோவந்திங் கெய்துறுமே.

(4)

கைக்கிளை - முற்றிற்று.

இய்ற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க. அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்; அந்நான்கும் இரந்து பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினாறும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு:

இரந்து பின்னிற்றற் கெண்ணல்.

(இ-ள். தலைவன்தலைவியையாசித்துப் பின்னிற்றற்கு நினைத்தல்.

தேடித் தனந்தரு வோன்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பில்
வாடி யலையேல் வருவாய் மனமே மகிழ்ந்திரத்தற்

74