பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பம்பாய் போன்ற ஏனையவிடங்களிலும் வணிக நிறுவனங்கள் நடத்தியும், ஆங்குள்ள வணிக நிலையங்களில் பணியாற்றியும் மிக்க பொருளீட்டி வாழ்ந்து வந்துள்ளனர். இதனை எச்.ஆர். பேட் தனது திருநெல்வேலி கெசட்டியரில் உறுதிப் படுத்துகிறார்: "About one-fourth of the Population spend most of their time abroad as shop keepers and general traders in Rangoon, Mandalay, Kandy, Penang, Singapore, Bombay and many other places" k திரை கடலோடியுந் திரவியந் தேடு தமதுர் வாசிகளின் அந்நாளைய வழக்கப்படி ஷம்சுத்தாசீனவர்களும் தமது இளம் வயதிலேயே கீழைக் கடல் கடந்து பர்மா சென்று இரங்கூன், நவ்வு, மாண்ட்லே, மீஞ்ஞான் போன்றவிடங்களிலும், நம் நாட்டில் கன்னியாகுமரி, கல்கத்தா, கடலூர், புதுவை, சென்னை, காக்கி நாடா, கொச்சி போன்ற நகரங்களிலும் பற்பல விதமான வாணிபச் சாலைகளை நிறுவியும் நடத்தியும் பெரும் பொருளிட்டினார். தமது உறவினர், சுற்றத்தினரையும் தம் ஊரைச் சேர்ந்தவர்களையும் தமது நிறுவனங்களில் பணியாற்றச் செய்து ஆதரித்தும், அறப்பணிகளாற்றியும் வந்தார். இன்சொல், நம்பிக்கை, நாணயம் ஆகியனவற்றை உயிர் மூச்சாகக் கொண்டவராய், விடா முயற்சியுடன் உழைத்துத் தனித்திறன் பெற்று அவர் விளங்கியமையால், எண்ணெய் வணிகச் சந்தையின் முதன்மையிடத்தை அவரது நிறுவனம் பெற்றிருந்தது. அதன் காரணமாக அரசினராலும் வணிக குழாத்தினராலும் எண்ணெய் அரசர் (King of Oil) எனப் பாராட்டப் பெற்றார். ஹலரத்து ஞானியார் சாகிபு 'இஸ்லாமிய மெய்ஞ்ஞானத்தைத் தமிழ்த்தேனில் குழைத்துத் தந்த ஞானியர் தக்கலை பீர் முகம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் சாகிபு, கோட்டாறு ஞானியார் சாகிபு எனப் பலர் ஆவர்' - ** ஷெய்கு மன்ஸார் ஹல்லாஜ் என்பார் பாரசீக (ஈரான்) நாட்டில் ஹிஜிரி 24 ஆம் ஆண்டு (கி.பி. 858) தோன்றிய இஸ்லாமிய சூஃபி ஞானியாவார். மெய்ப்பொருள் நிலை தெளிந்துணர்ந்த இவரது ஞான மார்க்கத்தினை

  • H.R. Pate:Tinnevelly Gazetter, P. 485. ** பேராசிரியர் மு. அப்துல் கறீம் எம்.ஏ.,இஸ்லாமும் தமிழும் 1985 பக். 91.

6