பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்பாராட்டல். (இ-ள்.) தலைமகன் தலைமகள்மாட்டுள்ளது மில்லதுங் கூறிப்புகழ்ந்து கொண்டாடுதல். ஆயின் உள்ளது கூறுதலும் பொய்பாராட்டலோவெனின், அற்றன்று. மற்றென்னையெனின் இல்லது கூறுவான் உள்ளதை விட்டுவிடுவா னல்லனென்க. . எல்லாரு மேத்துமிக் கோன்ஷம்சுத் தாசி னிருஞ்சிலம்பில் வல்லாருங் கொங்கை மடமயி லேயுன்றன் வார்குழற்சீர் செல்லார வேண்டி யலைவாய்ப் பயமிகச் சென்றலறி யல்லாரு மேலுமக் கோசலம் விட்டங் கழுங்கிடுமே. (/0) இடம்பெற்றுத் தழால். (இன்) தலைவன்தலைவியைத் தழுவுதற்கு வாய்த்த இடத்தைக்கண்டு கூறுதல். முந்தத் தவத்தின் முழுதுல கேத்த முதிர்ந்துதித்த சந்தத் தடமுலை யிர்நூந்தங் கட்கனை தைத்தவலஞ் சிந்தத் தயங்குமென் சிந்தா குலமறச் சேர்ந்ததர விந்தத் திருப்பத வேள்வும்சுத் தாசீன் வியன்பொழிலே, (//) .ெ! ழிபாடு மறுத்தல். (இ-ள்.) இரந்து பின்னிற்றன் முதலாகப் பொய்பாராட்ட லீறாகத் தலைவன் வழிபட்டதனைத் தலைவி மறுத்தல். பண்ணேறு மென்மொழிப் பாவலர் போற்றுநற் பைந்தமிழ்ச்சீர் விண்ணேறு மாறமைத் தோன்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பிற் றண்ணேறு சாந்தஞ் சமைந்தளி தேறலுஞ் சார்ந்தளவி - லெண்ணேறு போதங்கொண் மாதவி யேயெம்மை யேற்றருளே. (/2) இடையூறு கிளத்தல். (இ-ள்) தலைவி வெட்கமுற்றுக்கண்ணை மூடிக்கொண்டு நிற்றலினாலெழுந்த துன்பத்தைக் கூறுதல். பாட்டாற்றி வந்தநற் பாவலர் வேண்டும் பரிசனைத்துங் கேட்டாற்ற வல்லபு மான்ஷம்சுத் தாசீன் கிளர்வரையிர் தேட்டாற் றிகழ்ந்த செழுந்தன நீத்துக்கை சேரலர்போற் கோட்டாற்றை விட்டுய ராமீன் புரங்கொளுங் கொள்கைநன்றே. (/3) நடுநினைந்திரங்கல் (இ-ஸ்.) புணர்ச்சி யெய்தாமையாலிவளுள்ள மெஞ்ஞான்றியையுமோ? வென நெடுநேரந்தலைவனினைந்துதலைவியைப் பார்த்துக் கூறுதல். 76