பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னணி பின்னணி முற்றும் வகுத்து முதலிடைகான் மன்னணி யாவுநின் னாயமு மின்புற மாட்டுவனே. (21) அணிந்துழிநாணிய துணர்ந்து தெளிவித்தல். (இ-ள்.) தலைவன் அவ்வாறு புனைந்துழித் தலைவி பாங்கியாலணியப்பட்ட அணிக்கு இவர் கையாலணியும் அணி வேறுபடுமென்றும், அதைப் பாங்கியறியில் ஐயம் பிறக்குமென்றும், நானுற்றுவெட்கப்பட்டாளாக, அதைத்தலைவனறிந்து தலைவியைத் தெளிவித்தல். பாவிய லாய்ந்தருள் வோன்ஷம்சுத் தாசீன் பனிவரையி னோவிய மன்ன வொளிர்முகத் தாயுன்ற னுண்மைசெறி காவியங் கைவைத் தெழுத்தொடு சொற்பொருள் கண்டழியாப் பாவிய லோதி முடித்தே னணியும்பின் னாய்தரவே. - (22) பெருநயப் புரைத்தல். (இ-ள்.) இனி, தலைவன் வருவானோ? வாரானோ? வென்று தலைவிமுகம் வேறுபட;அதைத்தலைவன்குறிப்பாலுண்ர்ந்துதனது மிகுந்தகாதலைக்கூறுதல். காதுங் கனிந்துட் கரைதரப் பாடளி காளறியி னோது மொருகைப் பிடியனம் போனடத் தோங்குமிரு போது முலைமுத்தந் தந்துரை யாடற் புதவலியொன் றேதும் பரும்புகழ் மால்ஷம்சுத் தாசீ னிறும்பகத்தே. (23) தெய்வத்திறம் பேசல். - (இ-ஸ்.) மேற்கூறியதைத் தலைவிதெளியா தவளாகத் தலைவன் அவளுழ்வலியின்றிறத்தைக் கூறுதல். நிதியா லுயர்ந்த துரைஷம்சுத் தாசி னெடுவரைவாய்த் துதியா ரயில்விழித் துரமொழி யேயுடற் றோமொழியே மதியா தியற்றும் வலியுள தாயின் மருவருமோர் விதியாம் பிணையிற் பிணைப்புறு நம்மையும் வெல்லரிதே. (24) பிரியேனென்றல். (இ-ள்.) தலைவன்பிரிவனென்னுங்கவற்சியால்தலைவியுடல் விளர்ப்புக்கண்ட தலைவன் உன்னைவிட்டுப் பிரியமாட்டே னென்று கூறுதல். சிறந்து வளர்நிதி யோன்ஷம்சுத் தாசின் செழுங்கிரிவாய்ப் பிறந்து வளர்ந்தநற் பெண்கொடி யேயஞ்சிப் பேதுறனிற் றுறந்துங் கனவி னனவோ டனுவுங்கை சோர்ந்திதய மறந்தும் பிரியேன் பிரியிற் றரிக்கிலன் மன்னுயிரே, (25) 79