பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிந்து வருகென்றல். (இ-ஸ்.) பிரியேனென்றது கேட்டு மகிழ்ந்த தலைவிக்குத் தலைவன் பின்பிரிந்து வருவேனென்று கூறுதல். அற்றே ரணிகுழ லாயிழை யாய்பொழி லாடுதிபோர்ச் செற்றே பகைதடிந் தோன்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிவாய்ச் சற்றே பிரிந்து வருவேன் றரியேன் றரிக்கினுமங் குற்றே ப்ெபனைக்கொடு வந்திடு மென்னக முன்னகமே. (26) இடமணித்தென்றல். (இ-ன்.) தலைவனுர்துரத்திலுள்ளதோ? சமீபத்திலுள்ளதோ வென்றுதலைவி வருந்திய அதனைக் குறிப்பாற்கண்ட தலைவன் ஊரிருக்குமிட மிகச் சமீபத்திலுள்ளதென்று கூறுதல். யோகத்திற் சீரி லுயர்விற் றகையி லுற்றபல போகத்திற் சீர்த்த மான்ஷம்சுத் தாசீன் பொலங்கிரிவாய் மேகத்தி லோங்கு குழன்மட வீர்நகர் வேறலநம் பூகத்தி லும்மூர் கறிக்கொடி யேறிப் புணர்ந்திடுமே. (27) இவற்றுள் முன்னைய நான்கும் ஐயந்தீர்த்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கு முரியன. - வன்புறை முற்றிற்று. தெளிவு. . அஃதாவது :- தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத்தெளிந்தாற்றுவது; இது வகையும் விரியுமில்லாமனின்றது. வான்பிறழ்ந் தாலு மலைபிறழ்ந் தாலு மதியிரவி தான்பிறழ்ந் தாலும் பிறழாத் தகையர்சொற் றான்றவறி யேன்பிறழ் வார்பிற ழார்வரு வார்மன மேங்குறல்பூந் - தேன்பிறழ் மார்பகத் தோன்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்தே. (28) தெளிவு - முற்றிற்று. பிரிவுழி மகிழ்ச்சி அஃதாவது - பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்; இது வகையின்றிச் செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தோடு சொல்லலும் பாகனொடு சொல்லலுமாகிய இரண்டுவிரிகளையுடையது; அவை வருமாறு: செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தோடு சொல்லல். (இ-ள். புணர்ச்சிக்குறியிடத்தினின்றும் பெயர்ந்து செல்லாநின்ற தலைமகளது செலவைக்கண்டுதலைவன்றன்னெஞ்சொடு சொல்லுதல். 80