பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேகமு மோர்கைவெண் சோமனு மோர்கை விளக்கியிரு நாகமுங் கொண்டொரு நாகமு மன்னமு நானுறவெச் சோகமுந் தீர்த்தருள் வோன்ஷம்சுத் தாசின் சுடர்க்கிரிவா யாகமு மொல்க வசைந்துறு மானந்த மாருயிரே. (29) பாகனொடு சொல்லல். (இ-ஸ்.) தலைவன் றன்னைத் தேடிவந்த தேர்ச்சாரதியிடத்தில்தலைவி செல்லுதலைக் காட்டிக் கூறுதல். - முன்னோடு பின்னு முறைமுறை பார்த்துண் முதிருமச்சந் தன்னொடு வேர்ப்புத் தளர்வுமென் போன்புத் தாங்கிமன்னர் மன்னொடு மானிகர்த் தோன்ஷம்சுத் தாசீன் மலைவலவ பொன்னொடு மின்னெனப் போவது யாரொரு பூங்கொடியே. (30) பிரிவுழி மகிழ்ச்சி - முற்றிற்று. பிரிவுழிக் கலிங்கல். அஃதாவது - தலைவி பிரிந்த இடத்துத் தலைவன் வருந்துவது; அது மருளுற்றுரைத்தல் தெருளுற்றுரைத்தலென இரண்டு வகைப்படும்; அவை: ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயமோவென்றல் முதல் கண்படை பெறாது கங்குனோத லீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு:ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயமோவென்றல். (இ-ன்.) தலைவியைப் பிரிந்த மாதர்கட்டம் வந்து வழிபடுதலைக்கண்டு இம்மாதர் கூட்டத் துள்ளாளென்னைத் தனித்துக் கூடியது என்ன மாயமோ? வென்று தலைவன் மயங்கிக் கூறுதல். - மெய்யோ டிரண்டெடுத் தன்பொன் றளித்துயர் மென்குழுவின் மையோ டொளிருங் கனமதி போல்வதி வாளிவனோர் கையோ டமர்தரு வோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற் - பொய்யோ கனவோ பிறிதோ வறியேன் புணர்ந்ததுவே. (3/) வாயில் பெற்றுய்தல். (இ-ள்.) தலைவி உயிர்ப்பாங்கி முகத்தை நோக்கிச் செல்லுதலைப் பார்த்துத் தலைவன் அப்பாங்கியைத் தூதராகப் பெற்று உய்வதாகக் கூறுதல். பாங்கி பக்கத்திலிருக்கு முயிர்த்துணைவி. - வருத்தி மயக்கு மயனோ யகற்ற மருந்துளதோர்த் திருத்தி மனமே யினையே லிவட னிணைவிழிவண் B1