பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டருத்தி யறிந்தளிப் போன்ஷம்சுத் தாசி னருட்கிரிவா பொருத்தி முகதா மரைமல ரோடி யொளித்ததுவே. (32) பண்பு பாராட்டல். (இ-ள்.) தலைவியினதழகைத் தலைவன் வியந்து கொண்டாடுதல். பண்பு - ஈண்டு அழகின்மேனின்றது. அடிபடும் வட்டு மலர்படும் போது மமரிலெதிர்த் தொடிபடுங் கொம்பு முடைபடும் வெற்பு மொளிர்சிறைக்குட் பிடிபடும் புள்ளும்பெம் மான்ஷம்சுத் தாசீன் பெருங்கிரிவாய்த் துடிபடு நுண்ணிடை கொங்கைக் கிணைசொலத் தோற்றுறுமே. (33) பயந்தோர்ப் பழிச்சல். (இ-ஸ்.) தலைவியைப் பெற்றோரைத் தலைவன் வாழ்த்தல். வந்திரந் தார்க்கருண் மால்ஷம்சுத் தாசீன் மலையமின்னை யெந்திர வாவியை யின்பக் கனியை யெமக்களித்தோர் சந்திர சூரிய ருள்ளள வும்புகழ்ச் சம்பனரா யிந்திர னுஞ்சசி யுங்கடுத் தோங்கி யிலங்குகவே, (34) கண்டடைபெறாது கங்குனோதல். -- (இ-ன்.) அன்றிரவிலே தலைவி தந்த ஆசையால் நித்திரை பெறாது இருட்காலத்தைத்தலைவன் நொந்து கூறுதல். படியோர் குடையிற்கொள் வோன்ஷம்சுத் தாசீன் பனிவரைமின் முடியோ நிசிகட லோவிழி யிந்தோ முகமெனயாந் துடியோ டுரைத்த தொடரா லெமையவை சூழ்ந்தெழுந்து விடியோ மெனநீண் டுறுக்கிக் கருக்கி வெகுண்டிடுமே. (35) இவற்றுள் முன்னைய தொன்றும் மருளுற்றுரைத்தற்கும், பின்னைய நான்குந் தெருளுற்றுரைத்தற்கு முரியன. காட்சி முதல் கண் படை பெறாது கங்குனோ தலிறுதியாகக் கூறிய முப்பத்தைந்து துறைகளும் முதல்நாள் நிகழ்ச்சி யென்க. - பிரிவுழிக் கலங்கல் - முற்றிற்று. இடந்தலைப்பாடு. அஃதாவது இயற்கைப் புணர்ச்சியிற் கலந்த தலைவன் மறுநாளவ்விடத்தில் வந்து தலைவியைக் கூடுதல்; அது: தெய்வந்தெளிதல், 82