பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடல் விடுத்தலென மூவகைப்படும்; அம்மூன்றுந் தந்த தெய்வந் தருமெனச் சேறல் முதல் ஆயத்துய்த்தலிறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு: தந்ததெய்வந் தருமெனச் சேறல். (இ-ஸ்.) முன் கூட்டியவிதி யின்னுமவ்விடத்திற் சென்றாற் கூட்டுமெனத் தலைவன்சேறல். இன்றந்த வீகையு மின்மையும் யார்க்கு மியல்பெனிற்செம் பொன்றந்த மார்பன்பு மான்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற் றுன்றந்த வண்பொழிற் றோகையி னெம்முயிர்த் தோகைமின்னை முன்றந்த தெய்வ மினுந்தரு மாலங்கு முந்துதுமே, (36) முந்துறக் காண்டல். (இ-ள்.) முன்போலத் தலைவியைத் தலைவன் காணுதல். மாறா வமுத மழையோசுகிர்த மருவுருவோ நூறா மணிவிளக் கோமதி யோவிதி நுண்ணழகோ தேறார் குடிகெடுத் தோன்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்தோர் கூறா யொளிரு முயிர்க்குயி ராமென் குலதெய்வமே. (37) முயங்கல். (இ-ள்.) தலைவியைத் தலைவன் புணர்தல். மன்னர்க் கதிபதி மால்ஷம்சுத் தாசீன் மலையமுத மன்ன வருவா ளகங்கனிந் தாடு மருள்வெளியு ளென்னி லவளு மவளகம் யானு மிரண்டறவொன் றென்னக் கலந்த விருஞ்சுகம் யார்க்கு மியம்பரிதே. (38) புகழ்தல். (இ-ஸ்.) தலைவன்தலைவியைப் புகழ்ந்து கூறுதல். குடைபட்ட கோலுடைக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பின் றொடைபட்ட கோதை யிவள்விழி நோக்கித் தொடர்ந்துலைவாய்க் கடைபட்டுத் திப்பட் டடிபட்டுச் செம்புனற் கக்கிக்கக்கி Xமுடைபட்ட தன்றிச் சரிப்பட் டிலையினு மொய்கனையே. (39) ஆயத்துய்த்தல். - (இ-ன். தலைவன்தலைவியை மகளிர் கூட்டத்துள் விடுத்தல். முலைகாட்டி முத்த நகையிதழ் காட்டி முழுதுமின்ப 83