பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைகாட்டிக் காட்டுமென் ைெஞ்சமன் னிர்கமழ் நெய்ந்நிணவே லிலைகாட்டி யோங்குகை யோன்ஷம்சுத் தாசீ னிருஞ்சிகர - மலைகாட்டி யாடுதும் மாயத்துட் போந்தங்கு மன்னுகவே. (40) இவற்றுள் தந்த தெய்வந் தருமெனச்சேறலொன்றுந் தெய்வந் தெளிதற்கும், காண்டல் முயங்கல் புகழ்தலாகிய மூன்றுங்கூடற்கும் ஆயத்துய்த்தலொன்றும் விடுத்தற்கு முரியன. இதுவரையும் இரண்டா நாள் நிகழ்ச்சி. - இடந்தலைப்பாடு முற்றிற்று. பாங்கற் கூட்டம் அஃதாவது - மூன்றாநாள் தோழனாற் கூடுங் கூட்டம்; அது: சார்தல் கேட்டல், சாற்றல், எதிர்மறை, நேர்தல், கூடல், பாங்கிற் கூட்டலென எழுவகைப்படும்; அவ்வேழுந்தலைவன் பாங்கனைச்சார்தல் முதல் பாங்கிற் கூட்டலிறாகிய இருபத்து நான்கு விரிகளையுடையன; அவை வருமாறு: - தலைவன் பாங்கனைச் சார்தல். (இ- ள். தலைவன் தலைவியால் வந்த ஆசைநோய் தோழனா லன்றித் திராதென்றெண்ணிஅவனைச்சார்தல். வாவியிற் காவிநற் பாலொடு நீரென மாதலசஞ் சீவியி லோங்குபு மான்ஷம்சுத் தாசீன் சிமையமத னேவிய வெஞ்சிகிக் கஞ்சிநெஞ் சேயினை யேல்வருவா யாவியி னாவியன் னானுள விைன்றென் னருந்துணைக்கே. (4/) பாங்கன்தலைவனையுற்றது வினாவல். (இ-ஸ். பாங்கன் தலைவனது மனமும் புயமும் வாடிய வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு வந்ததற்குக்காரணமென்னை யென்று கேட்டல், நீடாழி வைய நிலைபிறழ்ந் தாலு நிலாப்பகலற் - றோடா தொழியினு மொண்டமிழ் தேர்ந்துணர்ந் தோர்க்கொருத்தல் கோடானு கோடிதந் தோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்ப வாடா மலர்ப்புயம் வாடிய வாறென் வழுத்துகவே. (42) - தலைவனுற்றதுரைத்தல். (இ-ன்.) அங்ங்னங் கேட்ட பாங்கனுக்குத் தலைவன் தனக்குற்ற வேறுபாட்டின் காரணத்தைக் கூறுதல். 84