பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதஞ் செறிகுணத் தோன்ஷம்சுத் தாசி னெடுங்கிரிவா யேதந் தவிருற வோயெழிற் காமனுற் றெய்தருமென் போதஞ் சரியப் பொறியளி சாடப் பொருதுதந்த வாதங் கடுப்ப மலிபுலன் று.ார்த்ததொர் மாதங்கமே. (43) - கற்றறி பாங்கன் கழறல். (இ-ள்.) வேதாகமங்கள் யாவுங்கற்றறிந்த பாங்கன்தலைவனை பிடித்துக் கூறல். என்னே கலைகண் முழுதுற வாய்ந்தின் றெழிலளகை மன்னே யெனவரு மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பின் பொன்னே புரையுமெய் பூணலங் கண்ட புரவலவம் மின்னே நிகர்த்தபெண் பேதைக் கழிதல் வியப்பலவே. (44) கிழவோன் கழற்றெதிர் மறுத்தல். (இ-ள்.) பாங்கன் கூறிய உறுதிமொழியைத் தலைவன் மறுத்தல். ஆட்சியுங் கோலுங்கொள் வோன்ஷம்சுத் தாசி னருண்மலைமின் மாட்சியுங் கொங்கை மலையும் வதன மலருமைம்பா னிட்சியும் பால நிலவும் புருவ நிலைமையுங்கண் காட்சியுங் காண்கிலை காண்கிற் கவல்வைகொல் கட்டுரையே. (45) பாங்கன் கிழவோற் பழித்தல். (இ-ஸ்.) அங்ங்னங் கூறிய தலைவனைப் பாங்கன் நிந்தித்துக்கூறுதல். காரைத் தருவையன் னோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்பொன் னாரை நிகர்ப்பவொ ராயிழை யாட்கங்கி லாதவிடைச் சிரை நினைந்துடைந் தாயர சேயிது தேரிற்சிறு கோரை வளர்ந்துயர் கோபுர மாய்த்தெனுங் கொள்கைத்தன்றே. (46) கிழவோன் வேட்கை தாங்கற் கருமைசாற்றல். - (இ-ள்.) தலைவன் பாங்கனை நோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந்தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்க முடியாதெனக் கூறுதல். - துங்கந் தருகுணத் தோன்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்த் தங்கங் கடுத்தொளிர் தையனல் லாடனந் தாங்கிடைவெஞ் சிங்கம் பிளந்த செழுமுரத் தன்பநின் றியெனுஞ்சொற். புங்கம் புகுதிற் பொறுப்பன்கொ லோவுயிர் பொன்றுறுமே, (47) பாங்கன் றின்மனத்தழுங்கல். (இ-ள்.) அதுகேட்ட பாங்கன் எம்பெருமான் ஆற்றானா யிவ்வாறு கூறினால் அதற்கு நானென் சொல்வேனென்று தன்னுள்ளே வருந்துதல், 85