பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் புகழுண்டாகுமாறு பரவச் செய்ய வேண்டுமென்பதற்காக இவரது தொண்டரும் மெய்யடியாருமாகிய செய்யிது தாமீம் என்பார் மூலமாகத் தமது இளம் பருவத்திலேயே தீட்சையும் திரு நபி(ஸல்) அவர்களின் ஆசியும் பெற்றவர் ஞானியார் சாகிபு அவர்கள். ஷெய்கு முஹியித்தீன் மலுக்கு முதலியார் என்னும் இயற்பெயர் கொண்ட இவ் இறைநேசர் நாஞ்சில் நாட்டின் (குமரி மாவட்டம்) கோட்டாறு எனும் பதியில் ஹிஜிரி 1167 -ம் ஆண்டு (கி.பி. 1753) அவதரித்தவர். ஞானியார் அப்பா என அன்புடன் அழைக்கப்படும் இவ் அருட் செல்வர் ஒதாதுணர்ந்தவராய் யோக, ஞான நெறி நிலைகளையுணர்த்த வல்ல 'மெய்ஞ் ஞானத் திருப் பாடற்றிரட்டு' எனும் பனுவலை திருவாய் மலர்ந்தருளியுள்ளனர். திருவாங்கூர் அரசர், இராமநாதபுர சேதுபதி மன்னர், மேலமந்தை சிற்றரசன் ஆகிய அரசப் பெருமக்கள் போற்றி சிறப்புகள் செய்த பெருமைக்குரியவர் ஞானியார் சாகிபு: தமிழகத்திலும் கேரளத்திலுமுள்ள பலவிடங்களுக்கும் சென்று மக்களை நன்னெறிப்படுத்தி மன்ஸுர்ஹல்லாஜின் ஞானமார்க்கத்தை பரவச் செய்து வந்த ஞானியார் அவர்கள், தமது இளவலான இளைய ஞானியார் மவ்லானா ஷெய்கு உதுமான் சாகிபு அவர்களுக்கு குருத்துவ சாசன மீந்தருளி ஹிஜிரி 1209- ஆம் ஆண்டு ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 14-ல் (கி.பி. 1794) இறைவன் திருச்சமுக சந்நிதானத்தைச் சேர்ந்தனர். - தமது முன்னோரது அடியொற்றியவராய், வள்ளல் ஷம்சுத்தாசீனவர்களும் அவரது குடும்பத்தினரும் ஞானியார் சாகிபு அவர்களையே ஞானாசிரியராக ஏற்றுக் கொண்டவர்களாவர். அறப்பணிகளும் கொடை மாண்பும் திருப்பாடற்றிரட்டு பதிப்பித்தல் * நாளடைவில் ஞானியார் சாகிபு அவர்கள் காட்டிச் சென்ற ஞான மார்க்கத்தினைப் பின் தொடர்ந்தோர் பல்கிப் பெருகியமையாலும், வருங் காலத்துத் தலைமுறையினரும் ஒதியுணர்ந்து பயன் பெற்றுய்யும் வண்ணம் கேடுறாது காக்கப்பட வேண்டுமென்ற இன்றியமையாமை நேரிட்டதனாலும், நூறாண்டுகளுக்கும் மேலாக ஒலைச் சுவடிகளிலேயிருந்து வந்த ஞானக் கருவூலமாம் 'மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு' அச்சிற் பதிப்பிக்கப்பட்டு நூலுருப் பெற வேண்டுமென ஞானியார் சாகிபு வழியில் * சுசீந்திரம் வித்துவான் சி. குமரேச பிள்ளை, "செந்தமிழ் வளர்த்த செய்கு தம்பி’ (1986) பக். 24.25, - -