பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துண் டொளிர்புயத் தோன்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவா யெத்துண் டிலகுமொ ரேந்திழை யெய்த வினைவிழிவேற் குத்துண் டிருமுலைக் கோடுண் டனுதினங் கூர்ந்தமையற் பித்துண் டழிந்தன னம்மர சென்செயும் பேருலகே . (48) பாங்கன் றலைவனோடழங்கல். х (இ-ஸ்.) இங்ங்னம் வருந்திய பாங்கன் சகியாதவனாய்த் தலைவனோடு வருந்துதல். கலகத் தருமொரு கட்கடை மாதிடு காமவலை யிலகஞ் சுழலுனக் கென்சொலென் னோவினி யெங்குமொளிர் திலக மெனவமர் வோன்ஷம்சுத் தாசீன் சிமையவெற்ப வுலகம் புரளி லொருவருண் போவதை யொத்திடற்கே. (49) எவ்விடத்தெவ்வியற்றென்றல். (இ-ஸ்.) 'பாங்க னிவ்வாறு கூறியும் தலைவன் வருந்துதலைக்க்ண்டு இவன் தலைவியைக் கூடாதொழியின் இறந்துபடுமென்று தேறித்தலைவனை நோக்கி நின்னாற் காணப்பட்ட உரு எந்தவிடத்து எந்தவியலை யுடையதென்று வினாவுதல். வானகஞ் சூழ்ந்த மகிதலத் துன்மன வன்மையெல்லாந் தானகற் றற்கெழு மம்மான் றனக்கிடந் தண்ணருட்கோ ரானகம் போன்றமர் வோன்ஷம்சுத் தாசி னருஞ்சிகர்க் - கானக மோகட லோவிய லேது கழறெனக்கே. (50) அவனஃதிவ்விடத்திவ்வியற்றென்றல். (இ~ள்.) தலைவன் என்னால் காணப்பட்டவுரு இந்தவிடத்து இந்த இயலை யுடையதென்று கூறுதல். - புயலே குழலம் புயமே முகமுடற் பொன்னிடைநூல் கயலே விழிமுக் கனியே மொழிமுலை கைக்களிறென் மயலே தருவாட் கியலிட மார்வல மாழைமழை பெயலே பெறுகரத் தோன்ஷம்சுத் தாசீன் பெருவனமே. (5/) பாங்கனிறைவனைத் தேற்றல். (இ-ஸ்.) இவ்வாறு நீ வருந்தா தொழிக. நீ சொன்ன குறியிடத்துச் சென்ற தலைவியைக் கண்டு யான் வருகிறேனென்று தலைவனைப் பாங்கன் தேற்றல். திருவே யமர்புயத் தோன்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிசேர் மருவேய் பெருவனத் துன்மன மாள்வித்து மன்னுயிரைப் 86