பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருவேல் விழியைப் புலன்கொளு மாசையைப் போந்தறிந்து வருவேன் வருமள வும்பொறுப் பாயென்றன் மன்னவனே. (52) குறிவழிச்சேறல். (இ-ள்.) தலைவன்கூறிய குறியிடத்துத்தலைவியைக்காணப்பாங்கன்தேடிப்போதல். முலைப்பகை கண்டு மொழிப்பகை தேடி முழுதுமக்கக் கொலைப்பகை கொய்ய வெழுவள்கொல் லோருறை கூர்வனத்தும் ധതദ്ധതക கொள்ளுரத் தோன்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்க் கலைப்பகை தோட்டுணைக் காவலன் கண்டவக் காரிகையே. (53) இறைவியைக் காண்டல். (இ-iள். அங்ங்னந்தேடிச் சென்ற பாங்கன்தலைவியைக் காணுதல். வானே முடிவடி வாளே விழிமலர் வாய்வரைதோள் தேனே மொழிமதிச் சீரே முகமுடற் றேகமெங்கு நானே யெனப்புரப் போன்ஷம்சுத் தாசி னளிர்வரைமின் றானே பெருவனத் தெம்மிறை சொற்றவத் தாழ்குழலே. (54) இகழ்ந்ததற்கிரங்கல். (இ-ஸ்.) தலைவி பேரழகைக் கண்ட பாங்கன் காணாமுன்னம் எம்பெருமானை யறிவின்றியிகழ்ந்தன மென்றிரங்கிக் கூறுதல். தாவுண்டு செல்பரி வேள்வடிம்சுத் தாசீன் றமிழ்வரைவாய் மேவுண்டு வாழுமிவ் வெண்ணகைத் தேமொழி வின்னுதனோக் கேவுண்டு நெஞ்ச மினைவுண்டு வந்தவென் னேந்தலையா - னோவுண்டு வாட நுவன்றவெ லாமென்ற னொய்யறிவே, (55) தலைவனை வியத்தல். (இ-ஸ்.) தலைவி கண்வலையிற்சிக்கி அத்தடையோடுந் தலைவன் நம்மிடத்து வந்தது வியப்பென்று பாங்கன்அதிசயித்துக்கூறுதல், பொறையார் பெருந்தனப் பொற்றொடிச் சிற்றிடைப் பூவைமின்னா' ணிறையா ரலர்க்குழ னிண்முகி லோடி நிகழ்த்துபன்னூற் குறையா துணர்ந்தவென் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய் மறையா திருந்ததெவ் வாறெம்பி ரான்கலை மாமதியே. (56) இதுவுமது - கலைதாண்டி யோங்குமிக் கோன்ஷம்சுத் தாசீன் கனவரைமின் னிலை தாண்டிக் கூந்த னிசிதாண்டித் தேம னிலவுமுலை 87