பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைதாண்டித் துரண்ட மதிதாண்டி யெம்மன் மறிநயன வலைதாண்டிக் காம வலைதாண்டி வந்ததங் கற்புதமே. (57) - தலைவியை வியத்தல். (இ-ள்.) தலைவியைப் பாங்கன் வியந்து கூறுதல். பருக்கும் பெருமுலைப் பாரத்தி னந்தரப் பற்றொழிந்திங் கிருக்கு மொருமின் னிவள்விழி நோக்கிணை யென்றுமுற்றோர் திருக்குங் கருத்துமொத் தோன்ஷம்சுத் தாசீன் சிலம்பரசைக் கருக்கு மயல்விடக் காய்வுக் கமுதெனக் காத்திடுமே. - (58) இவ்வைந்தும் பாங்கன்றன்னுட் கூறியவை. . - தலைவன்றனக்குத் தலைவி நிலைகூறல். (இ-ள்.) தலைவி குறியிடத்துத் தன்த்து நின்றகின்ற நிலையைப் பாங்கன் கண்டுவந்து தலைவனுக்குக் கூறுதல். காவுங்கண் டேன்குழற் காடுங்கண் டேனின்னைக் காத்துறுகட் கோவுங்கண் டேனுடற் கோலங்கண் டேனலங் கூர்பொருளும் பாவுங்கண் டேமகிழ் வோன்ஷம்சுத் தாசீன் பனிவரையாய் யாவுங்கண் டேன்கண்டி லேனிறை வாதின் னியலின்மையே. (59) தலைவன் சேறல். (இ-ள்.) தலைவன் பாங்கன் சொற்படி குறியிடத்துப்போதல். மனமாய் விரைந்தவண் மன்னுதற் கேற்ற வழியெதுவு மினமா யறிந்தில மேயக மேசெய்வ தேதெளியோர் தனமா யொளிரும்பு மான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பி - னனமா யமர்ந்துநிற் பார்தமைக் கூடி யளாவுவதற்கே. (60) தலைவியைக் காண்டல். - (இ-ள்.) தலைவன் தலைவியைப் பார்த்தல். வற்றாச் சுகிர்தமெய் வாழ்வளித் தென்னுள மன்னிநின்ற முற்றா முகிழ்முலை மொய்குழ லாள்கலை முற்றுமுற்றக் கற்றார்க் கமுதனை யான்ஷம்சுத் தாசீன் கனகவெற்புட் - பொற்றா மரையனம் போற்றணி நின்றனள் பூம்புனத்தே. (6/) கலவியின் மகிழ்தல். - . (இ-ஸ்.) புணர்ச்சியின் மகிழ்தல். மெய்யுஞ் செவியும் விழிநாசி வாயும் விரைந்தருத்திப் பெய்யு மமுதப் பிழம்பனை யிரும்மிற் பெற்றசுகம் 88