பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்யும் புலையுமற் றோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பி லெய்யுங் ககனோ டிகதலத் தாருமிங் கெய்தரிதே. (62) புகழ்தல். (இ-ள்.) தலைவன் புனர்ந்தபின் றலைவியைப் புகழ்ந்து கூறுதல். அலைவாய்ப் படிந்தனை யாகமுங் கூனி யறக்குறுகி மலைவா யெழுந்தனை மாசே செறிந்தனை மாமறை நூற் கலைவாய் வருமியல் போன்ஷம்சுத் தாசீன் கனகமலை நிலைவா யிணைமுலை நேர்நுத லொத்திலை நீணிலவே. (63) பாங்கியொடுவருகெனப் பகர்தல். (இ-ஸ்.) இனி நீ யுன்னுயிர்ப்பாங்கியுடனே வருவாயென்று தலைவிக்குத் தலைவன் கூறுதல். கண்ணுக் கிமையுங் கடத்துக் குயிருங் கலந்ததொத்தெம் மெண்ணுக் கருளனை யிரினை நீரிவ ணேகினென்றும் பண்ணுக் கிசைபுக ழோன்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய் மண்ணுக் கணிசெய்தும் மன்னையர் தம்மொடு மன்னுகவே, (64)

பாங்கிற் கூட்டல். (இ-ள்.) தலைவன் தலைவியை ஆயத்துச்செலுத்துதல். ஆயம்-மாதர் கூட்டம். கோவா யொளிருங் குளிர்மதி நோக்கிக் குலவுமல்லிப் பூவாய்ப் பொலிவுறப் பூவைநல் லாய்பைம் பொருளனைத்து நாவாய் தருகடற் கோன்ஷம்சுத் தாசீனளிர்வரைவா யேவா தொழுகிநின் னேவல்செய் யாயங்கண் டேய்ந்தருளே. (65) இவற்றுள் முன்னைய மூன்றுஞ் சார்தல் கேட்டல் சாற்றலென்னு மூன்றற்கும், பாங்கன் கழறல் முதல் கிழவோன் வேட்கை தாங்கற் கருமை சாற்றலீறாகிய நான்கும் எதிர்மறைக்கும், பாங்கன்றன் மனத்தழுங்கல் முதல் தலைவன் றனக்குத் தலைவி நிலைகூறலிறாகிய பதினொன்றும் நேர்தற்கும், தலைவன் சேறல் முதல் புகழ்தலிறாகிய நான்கும் கூடற்கும், தலைவன் றலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தலும் தலைவன்றலைவியைப் பாங்கிற் கூட்டலுமாகிய இரண்டும் பாங்கிற் கூட்டற்கு முரியன. பாங்கற்கூட்ட முற்றிற்று. 39