பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கிமதியுடன் பாடு. அஃதாவது - தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் இருவரு முளவழி யவன்வர வுணர்தலென மூன்று வகைப்படும்; அவற்றுள் முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானே கூட்டமுண்மை யறிதல்; அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடலென மூன்றாம்; அவை வருமாறு: தோற்றத்தாலாராய்தல், (இ-ள்.) தலைவிபுணர்ச்சியாற் பெற்றதோரழகைக்கண்டு பாங்கி சந்தேகித்தல். பந்தாடி யோவம் மன்ைபயின் றோமலர்ப் பைந்தடத்தின் சிந்தாடி யோபுனற் சேறுசெய் தோதெவ்வர் தீர்தாச்சி னந்தாடி வென்றபு மான்ஷம்சுத் தாசீன கத்தினிடைத் தந்தாடி வாடு முலையிவண் மேனி தளர்ந்ததுவே. (66) - ஒழுக்கத்தால்ாராய்தல். (இ-ள்.) தலைவி தெய்வந்தொழாமை முதலியகண்டு பாங்கி சந்தேகித்தல். சதியாய்ச் சுழன்றெழு சந்தஞ் சரித்தடர் தாம்பிரநன் னதியார் துறையனங் கோன்ஷம்சுத் தாசி கைத்துளவன் றுதியாய்ப் பெருகிச் சுருணமொத் தேவெண்மை சூழ்ந்துயர்ந்த மதியாய்த் துலங்கு மதியே தொழத் மாதாசே, (67) சுனைநயப்புரைத்தல். (இ-ள். பாங்கி தலைவி யுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுத்தச் சுனையினது நனமையைக கூறல. அணியுந் திருத்தி யழகும் பொருத்தி யழிதருநற் றுணியு மிருத்தித் துளிநீ ரருத்தித் தொடர்ந்தாசர் பணியும் பதத்தனெம் மான்ஷம்சுத் தாசீன் பதியினலர்க் - கணியும் புனைந்ததெங் கண்மணி யிரெக் கவின்சுனையே. (68)

  • சுனைவியந்துரைத்தல். - (இ-ள்.) பாங்கி அச்சுனை வியப்பை யானுமாடிக் காண்பேனென்று கூறல், காவி சிவந்து கமலம் பசந்து கருதுமல்லி மேவி வெளுத்து விடுமே லடியேன் விளங்குமொன்னா ராவி யகற்றுமெம் மான்ஷம்சுத் தாசி னணிவரைவாய்த் தாவி யொளிருமின் னேகுடை வேனந்தத் தண்சுனையே. (69)