பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியேன் றணியிவண் போந்தன னும்மிற் பொலிவறுமப் பதியே துரையிர் பகரிற் சிதறுங்கொல் பான்முத்தமே. பெயர் வினாதல். (இ-ள்.) வெளி. காரே யனைய கருங்குழ லீர்நற் கனகமணிச் சிரே பெறுகழ லோன்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி லுரே புரைக்ககி விருமக் கின்றுவந் துற்றதிருப் பேரேனு மோதுதி ரேழையென் மீது பிரியமுற்றே. கெடுதிவினாதல். (இ-ள்.) கெட்ட பொருளைத்தலைவன் பாங்கியிடத்தில் வினாவுதல். துப்புண்டு சேக்குந் துவரித ழிரென் சுடர்க்கணைமுன் றப்புண் டடிக்கடி தாவுன் டொருமான் றரணிமுற்று மொப்புண் டொளிர்புயத் தோன்ஷம்சுத் தாசி னுயர்வரைவாய் வெப்புண் டொழித்துறக் கண்டதுண் டோவிள்ளு விரெமக்கே. வழிவினாதல். (இ-ள். தலைவன்றான்செல்லும் வழியைப் பாங்கியிடங் கேட்டல், கல்லுங் கருதுங் கனதனத் திரொளி கண்டுகதி ரெல்லும் பணிமுடி யோன்ஷம்சுத் தாசி னருஞ்சிலம்பிழ் செல்லும் வழிதெரி யேன்றிகைத் தேனுளந் தேர்ந்தகலச் சொல்லு மொருவழி சொன்னா லிலையிலைச் சூழ்பிழையே. ஒழிந்தது வினாதல். (இ-ஸ். பாங்கியொன்றும் பேசாதிருத்தலைத் தலைவன் கேட்டல். பெருவாய்ப் பிடிநடைப் பெண்ணனங் கீர்விண் பிறங்குமஞ்சு தருவாய்த் தினந்தரு வோன்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பின் மருவாய்க் கமல மலர்கண்டு வாடு மதிமுகத்துந் திருவாய் திறந்தொரு செய்திசொன் னாலென்ன திவினையே. யாரே யிவர் மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல். (73) (74) (75) (76) (77) (இ-ள். மேற்கூறியவாறு கண்ணியுந் தழையு மேந்திவந்து ஊர் முதலியவை வினாவி நின்றவர் யாவரோ? இவர் மனத்தினினைப்பு யாதோ? எனப்பாங்கி தன்மனத்தில் ஆராய்ச்சி செய்தல். 92