பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரும் பெயரு முரைவழி யாதின் று.ழன்றொருமான் றேரும் படியிவண் சென்றதுண் டோவென்பர் திக்கெட்டுமிப் பாரும் புகழ்வளர்த் தோன்ஷம்சுத் தாசீன் பனிவரைசேர்ந் தாருங் கருத்துமிங் காரென்னை புற்றது மாய்ந்திலமே. (78) எண்ணந்தெளிதல். (இ-ள். தலைவனினைப்பைப் பாங்கி தெளிதல். ஊரும் பெயரு முழையும் வழியு முவந்தவரன் றாரும் புகழும்பு மான்ஷம்சுத் தாசீனணிவரைவா யேருங் குணமு மிசையும் பெருகிவ ளேயந்தவிள நீருங் கனியு நினைந்தவர் காம நெடும்பசிக்கே. (79) இருவருமுளவழி யவன்வரவுணர்தல். அஃதாவது - தலைவியுந் தானுமொருங்கிருந்த விடத்தில் தலைவன்றணி வரப் பாங்கி கண்டு அதனானே கலப்புண்மையறிதல், அதன் விரி வருமாறு: - தலைவன் கையுறையேந்தி வருதல். (இ-ள். தலைவியும் பாங்கியுஞ் சேர்ந்திருப்பது கண்டு தலைவன் கையுறை யேந்தி வருதல், கையுறை காட்சிப் பொருள். விண்பட்ட சோமனும் வெண்மையும் போலவிம் மேதினிக்கோர் பண்பட்ட வள்ளல்பு மான்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்த் தண்பட்ட தேமொழி யாரிருந் தாரிது தான்சமயந் புண்பட்ட காதற் பொலிவற யாவும் புகலுதற்கே. (80) - தலைவனவ்வகை வினாதல். (இ-ஸ்.) தலைவன்முன்கெடுதி வினாவியது போல் மீண்டும் யானை வந்ததோ? வென்று வினாவல். - - பொய்ப்புண் டொளிரிடைப் பூவையன் னிருங்கட் புங்கமங்கண் வைப்புண் டவிர்புய மால்ஷம்ச்த் தாசின் மலையவெற்பிற் றைப்புண் டிாத்தத் ததும்புண்டு வாடித் தளர்ந்துளமிக் கெய்ப்புண் டிரிந்திவண் வந்ததுண் டோவொ ரிருங்களிறே. (8/) எதிர்மொழி கொடுத்தல். - (இ-ஸ். பாங்கி தலைவன் வினாவுக்கு விடை கூறுதல், 93