பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஹிராடெடஸின்



இந்த காரியா இனத்தவர்களைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த கிரேக்கர்கள், அவர்களை மிக இழிவாக நடத்தி, அடிமைகளாகக் கருதினர். அப்போது அந்த நாடு அரசர்களாலும் அரசிகளாலும் ஆளப்பட்டு வந்தது. அந்த அரச பரம்பரையினர் ஹிராடெடஸ் பிறந்த ஊரான ஹலிகார்ன சகில் என்ற இடத்தையே தங்களது இருப்பிடமாக நிறுவிக் கொண்டார்கள். அவர்களுள் சிலர் மேன் மக்களாகவும் - மேதைகளாகவும், கல்விமான்களாகவும் வாழ்ந்தனர்! வேறு சிலர், லிடியர்களுடனும் பாரசிகத்தினர்களுடனும் சேர்ந்து போரில் திறமை பெற்று வாழ்ந்தார்கள்.

இத்தகைய காரியர் இனமக்களுள், ஹிராடெடஸ் கல்வியாளர்களது பிரிவினர் பரம்பரையிலே பிறந்தவர் ஆவார். அப்போது, ஒரு காரியப் பெண்ணரசி, ஆட்சி செய்து வந்தாள். அவள் பெயர் அர்டி மசியா என்பதாகும். அவள், பாரசீகப் போரில் மன்னர் செர்க்சிசுக்குப் படைப்பலம் உதவிசெய்தவள். அந்தப் போரில், அந்த மன்னரிடம் - இருபத்தாறு லட்சத்து நாற்பத் தோராயிரம் படைவீரர்கள் இருந்ததாக ஹிராடெடஸ் தனது வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னன் செர்க்சிஸ் பிறகு இருபதாண்டு காலம் ஆட்சி செய்து கி.மு. 465 ஆம் ஆண்டின் போது அர்டபான்ஸ் என்ற படைத் தளபதியால் படுகொலை செய்யப்பட்டார் என்று அவர் கூறுகிறார். காரியர் இனப் பெண்ணரசி அர்டிமிசியாவின் பதினான்கு ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகு, அவளது பேரன் லிக்டமிஸ் கொடுங்கோலாட்சி செய்தவந்தான். அப்போது, அந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருந்தனர். அவர்களுள் ஒரு பிரிவு கொடுங்கோலன் ஆட்சியை ஒழிப்பது என்றும், மற்றப் பிரிவினர் அடிமையாகவே வாழ்ந்து சாகலாம் என்ற முடிவிலும் இருந்தார்கள்.

கொடுங்கோல் அரசனை ஒழிக்கும் புரட்சிக் குழுவுக்கு ஹிராடெடஸ் தாய்மாமனும், சிறந்த கவிஞருமான பான்யாசிஸ்