பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

19


குடியேற்றங்களை தமிழர்கள் அமைத்தனர் என்பதையும், அந்த மக்கள் தான் பாமேசியர் என்றும், அப் பாமேசியர்களே பினீசியர்களாக வரலாற்றில் பெயர் ஏற்று வாழ்ந்து வந்தவர்கள் என்றும் ஹிராடெடஸ் தனது ‘வரலாறுகள்’ என்ற புத்தகத்திலே குறிப்பிட்டு, தமிழ் மக்களுக்கும் ஒரு வரலாறு உண்டு என்பதை நிரூபித்தவர் ஹிராடெடஸ். இந்த வரலாற்றுச் சம்பவத்திற்கு அஸ்ஸீரிய நாட்டிலே உள்ள கல்வெட்டுகள் ஆதாரமாக இன்றும் இருக்கின்றன.

அஸ்ஸீரிய நாட்டுக் கல்வெட்டு மட்டுமல்ல தமிழர் தான் பினீசியர் என்பதற்குரிய சான்று. பினீசியர் மக்கள் இடையே உள்ள தமிழரது பழக்க வழக்கங்களையும், தமிழ்ப் பண்பாடுகளையும் அவர் சுட்டிக் காட்டி பெரும் பெருமையையும் நமக்கு உருவாக்கி இருக்கிறார்.

அதுமட்டுமன்று, பாரசீக மன்னர்களுள் ஒருவன் அஸ்டிய கெஸ். அவனது நம்பிக்கையாளன் ஹர்பகஸ் அரசுப் பணிகளில் தன்னை ஏமாற்றி வாக்கு மோசடி செய்து விட்டான் என்று எண்ணி, ஹர்பகசின் பதின்மூன்று வயது சிறுவனைக் கொன்று பெற்ற தகப்பனான ஹர்பகசுக்கே அந்த அரசன் அஸ்டியகெஸ் பிள்ளைக் கறியமுது விருந்து வைத்தான்.

இந்தச் சம்பவத்தை ஹிராடெடஸ் தனது வரலாற்றில் எழுதியுள்ளதானது. தமிழ்நாட்டில், கி.பி. 1113, 1150 ஆம் ஆண்டுவரை அரசாண்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமானால் எழுதப்பட்ட பெரிய புராணம் என்ற நூலின் சிறுத்தொண்ட நாயனார் - சிவ பெருமானுக்குப் பிள்ளைக் கறியமுது படைத்த வரலாற்றுச் சம்பவத்தையும் நமக்கு நினைவுபடுத்துவதாக உள்ளது.

அதுபோலவே, இந்திய நாட்டின் மற்றொரு சம்பவத்தையும் அவரது நூல் நமக்கு நினைவுறுத்துகிறது. அதாவது வராகமிகிரர்