பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஹிராடெடஸின்



சாலமோன் என்ற மாமன்னன், சீதோனின் அரசனாக இருந்த ஹீராம் என்பவரிடம் தான் கட்டிமுடிக்க இருக்கும் கோயில்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்து சேர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.”

ஹீராம் என்பவரும், இந்தியாவிலுள்ள ‘ஓபிர்’ துறைமுகத்துக்கு வந்து, என்னென்ன பொருட்கள் கோயில் கட்ட தேவையோ ‘அவற்றை எல்லாம் வாங்கிச் சென்றார். நாளடைவில், பினீசியர்களே தங்களது கப்பல்களில் அப்பொருட்களை ஏற்றிச் சென்றார்கள்.’

“இந்தியாவில் உள்ள ஓபிர் துறை முகத்துக்கும் சீதோன் நாட்டுக்கும் உள்ள கடல் மார்க்கக் கப்பல் வழி பினீசியர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதை அவர்கள் வியாபார ரகசியமாகத் தெரிந்திருந்தார்கள்.” என்று, "THEY ALL DISCO VERED AMERICA : PAGES 524 - 526" என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இதனால் நமக்குப் புரிவது என்ன? பினீசியர்கள் கி.மு. 3000 ஆம் ஆண்டுக் காலத்திலேயே, தமிழ் நாட்டிலே இருந்து கடல் வழியாகச் சென்று, பனை, தென்னை மரங்களைத் தாங்கள் இருந்த இடத்திலே பயிரிட்டார்கள் என்றும், அதற்குப் பிறகு அவர்களைத் தொடர்ந்து தமிழர்கள் பலர் அங்கே குடியமைப்புகளை நிறுவி வாழ்ந்து வந்தார்கள் என்பதும் திட்டவட்டமாகத் தெரிகிறது அல்லவா?

மேற்கண்ட கருத்து உண்மைதான் என்பதை அழுத்தந் திருத்தமாக வலியுறுத்தும் நோக்கத்தில், நமது இந்திய முன்னாள் குடியரசுத் தவைரும், உலக மக்களால் போற்றப்படும் தத்துவ ஞானியுமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், “OUR HERITAGE” என்ற நுாலில் 22-ம் பக்கத்தில் “The influence of Indian culture has been felt abroad since the 4th Century B.C. Possibly earlier, possibly Later.” என்று குறிப்பிட்டுள்ளார்.