பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஹிராடெடஸின்


“உலகத்தின் ஒரே ஆதிமுதல் மொழியாக இருந்து, பிறகு சிலரால் இரண்டு மொழிகளுள் ஒன்றாக்கப்பட்டு, இப்போது உங்களுடைய ஆட்சியிலே பதினான்கு மொழிகளுள் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கும் எனது தாய்த் தமிழ் மொழியை ஆராய்ந்து, ‘பிரெஞ்சி - தமிழ் அகராதி’ தயார் செய்து கொண்டிருக்கிறேன்”

-தமிழ்தான் உலக ஆதித் தாய் மொழி என்று பண்டித நேரு முகத்துக்கு முன்பு செம்மாந்து முழக்கமிட்ட அந்த பிள்ளைப் பெருமகனார் கருத்து உண்மைதான் என்பதற்குரிய சான்று, குறிப்பாக, அமெரிக்காவில் இன்றைக்கு 3600 ஆம் ஆண்டு கட்கு முன்பு பொறிக்கப் பட்டுள்ள கற்சாசனத்தை விட வேறு என்ன தெய்வ சாட்சி வேண்டும்?

அத்தகைய ஒரு தாய் மொழியைப் பெற்று பண்டைய பினீசியத் தமிழ்ப் பெருமக்கள், அமெரிக்கா சென்று கூட, தனது தாய் மொழி மீதுள்ள பற்றும் பாசமும் மறவாமல், நன்றிக் கடனாக ஒரு கற்சாசனம் அமைத்து, உலகமெல்லாம் தமிழ் மொழி பரவ வேண்டும் என்ற பாரதியின் ஆணையை அவர்கள் பாரதிக்கு முன்பே நாட்டிவிட்ட பெருமையின் அருமையை நம்மால் மறக்க முடியுமா?

3. தமிழ் நாட்டிலே இருந்த புறப்பட்ட பினீசியத் தமிழர்கள், மத்திய தரைக் கடலை அடைந்து, பிறகு அங்கிருந்து கிளம்பி இங்கிலாந்து நாட்டைச் சுற்றிச் சென்று, ஐஸ்லாந்து நிலப் பகுதியைச் சேர்ந்து, பிறகு வட அமெரிக்காவின் கீழ்க் கரையில் உள்ள வடசேலம் எனும் பகுதியை அடைந்து அங்கே குடியிருப்புக்களை உருவாக்கிய பின்னர், வட அமெரிக்காவின் பல பகுதிகளிலும் புகுந்து பரவிக் குடியேற்றங்களை நிறுவிக் கொண்டு வாழ்ந்துள்ளார்கள். இந்தக் காலம், கி.மு. 800 ஆம் ஆண்டாகும்.

அடுத்து வரலாற்றுக்கு வருவோம். மத்திய தரைக்கடலிலிருந்து புறப்பட்ட பினீசியர்கள், நேரே மேற்கே சென்று, சிறிது தெற்குப்