பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

43


அபகரிக்கும் பழிக்குப் பழியை உருவாக்கும் என்றது. மக்கள் அதிர்ச்சி அடைந்து ஊர் திரும்பினார்கள்!

இந்த வரலாற்றுக் கதையை லிடியா மக்கள் கூறும் நீதிக்கதை என்று ஹிராடெடஸ் தனது நூலிலே எழுதியுள்ளார்.

இதைத்தான் திருவள்ளுவர் பெருமானும் தனது குறளில்,

“அஃகாமை செல்வத்திற் சியாதெனின்; வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள்.”

(திருக்குறள்: 178)


8. தொட்டது எல்லாம் பொன்

லிடியா நாட்டை ஆண்டிருந்த ஹிராக்ளிட் பரம்பரையின் இறுதி மன்னரான காண்டெளல்ஸ்; தமது மனைவி அழகை ஊரார் மெச்ச வேண்டும் என்ற பேராசையால், மெர்ம்னடே பரம்பரையைச் சார்ந்த கைஜிஸ் என்ற தனது மெய்க் காவலனைக் கொண்டு மனைவியை நிர்வாணமாகப் பார்க்க வைத்த மானமற்றச் செயலால், கைஜிஸ் வாளுக்கு அம்மன்னன் பலியானான்.

கைஜிஸ் அந்த நிர்வாண ராணியை மறுமணம் புரிந்துகொண்டு, மன்னனானான். இவன் மெர்மனடே பரம்பரையின் முதல் அரசனாக, கி.மு.716-678 ஆம் ஆண்டுவரை ஏறக்குறை 38 ஆண்டுகள் அரசு புரிந்தான்! லிடியாவின் சக்கரவர்த்தியானதும், கைஸ் டெல்பி கோயிலுக்கு ஏராளமான விலைமதிப்புடைய பொருட்களை வாரி வழங்கி, கோயிலை மேம்படுத்தினான்! அந்த விவரம் இதோ:

கைஜிஸ் டெல்பி கோயிலில் உள்ள அலங்காரப் பணிகளுக்கு எவ்வளவு வெள்ளி வேண்டுமோ அவ்வளவையும் ஏராளமாக அனுப்பி வைத்தான்.